வியாழக்கிழமை, மார்ச் 28
Shadow

பிரான்மலை கோடங்கி விமர்சனம்

பிரான்மலை விமர்சனம்

காதல் படத்தை இன்னொரு டைமன்ஷனில் காட்டியிருக்கும் படம் தான் பிரான்மலை.

வளரி கலைக்கூடம் தயாரிப்பில் வர்மன் , நேஹா ஜோடி நடித்துள்ள பிரான்மலை சமூகத்தில் இப்போதும் யதார்த்தம் இதுதான் என்பதையும், வெளியே தெரிவதெல்லாம் வேஷம் என்பதையும் பட்டவர்த்தனமாக வலியோடு சொல்கிறது.

கண்டிப்பான அப்பா வேலா ராமமூர்த்தி தன் மகன் வர்மன் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய வெளியூருக்கு வேலைக்கு போக சொல்கிறார். அப்பாவின் பேச்சை மீற முடியாமல் அதே நேரம் தனது நண்பன் பிளாக் பாண்டி இருக்கும் ஊருக்கு செல்கிறார்.
அங்கே ஆசிரமத்தில் வளரும் ஹீரோயின் நேஹாவை பார்க்கிறார். பார்த்ததும் காதல்.
நேஹாவுக்கு திடீரென ஒரு சிக்கல் அதை ஹீரோ எப்படி சரி செய்தார்.
இவர்கள் காதல் கை கூடியதா.
காதலர்களை வேலா ராமமூர்த்தி என்ன செய்கிறார் என்பது தான் மீதி கதை.
அறிமுக நடிகர் என்றே தெரியாமல் வர்மன் தன் கதாபாத்திரத்தில் அத்தனை ஈடுபாடு காட்டியிருக்கிறார்.

கஞ்சா கருப்பு, பிளாக் பாண்டி காமெடிகள் சில நேரங்களில் சிரிக்க வைக்கிறது.

வைரமுத்து பாடல்கள் வலியோடு வருகிறது. மிக பரபரப்பாக ஓடி வெற்றி பெற்ற காதல் படத்தின் இன்னொரு முகமாக பிரான்மலை கதை மனதை கனக்க செய்கிறது.
தியேட்டர்கள் அதிகம் கிடைத்தால் பிரான்மலை வெற்றிப்படம்தான்.

  • கோடங்கி
727 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன