சனிக்கிழமை, ஆகஸ்ட் 1
Shadow

கை விலங்குடன் விஷால்… வைரலான கைது படம்..!

தற்போது திரைத்துறையில் நடிகர் சங்கம் பொது செயலாளராகவும்,தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் செய்திகளில் நிறைந்து நிற்பவர் நடிகர் விஷால். இன்று கைவிலங்குடனான ஒரு புகைப்படம் வெளியாகி பெரிய பரபரப்பை ஏற்படுத்தி ,விஷால் கைது செய்யப்பட்டார் என்று செய்திகள் பரவியது .

மணிக்கணக்காக இந்த செய்தி பரபரப்பாக பரவிக்கொண்டிருக்க, விஷால் தரப்பு அதுக்கு விளக்கம் அளித்துள்ளது. அது தற்போது படப்பிடிப்பு நடந்து வரும் ‘அயோக்யா’ படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட காட்சி புகைப்படம் தானே தவிர விஷால் கைது செய்யப்படவில்லை என்று விளக்கம் அளித்துள்ளனர் .

புது இயக்குநர் வெங்கட் மோகன் இயக்கும் அயோகியா படத்தில் ராஷி கன்னா கதாநாயகியாக நடிக்கிறார்.லைட் ஹவுஸ் மூவி மேக்கேர்ஸ்க்காக B. மது இப்படத்தை தயாரிக்கிறார்.

599 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன