வெள்ளிக்கிழமை, மே 24
Shadow

96′ ஜானுவாக 99ல் நடிப்பது பாவனா… சுடிதார் கலர் மட்டும் மாறிப்போச்சி…

பிரேம் குமார் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி மெஹா ஹிட் ஆன படம் ’96’.

பள்ளிப்பருவத்தில் அரும்பிய காதலையும், 22 ஆண்டு கழித்து அதன் நினைவுகளையும் உணரும் காதல் கதையாக ’96’ திரைப்படம் உருவாகி ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

இந்த படத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா, பள்ளிப்பருவ கதாபாத்திரங்களில் நடித்த ஆதித்யா பாஸ்கர் மற்றும் கவுரி கிஷான் ஆகியோர் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினர். தமிழில் ஹிட்டான இந்தப் படம், இப்போது கன்னடத்தில் ரீமேக் ஆகிறது. அங்கு இதற்கு ‘ 99’ என்று டைட்டில் வைத்துள்ளனர்.

ப்ரீதம் குபி இயக்கி வரும் இப்படத்தில் கணேஷ் நாயகனாக நடித்து வருகிறார். தமிழில் விஜய்சேதுபதி நடித்த ராம் கேரக்டரில் சில மாற்றங்களை செய்து கணேஷ் நடிக்கிறார்.
அர்ஜுன் சான்யா இசையமைக்கிறார். இதில் த்ரிஷாவின் ‘ஜானு’ கேரக்டரில் நடிகை பாவனா நடிக்கிறார்.

திருமணத்துக்குப் பிறகு நடிக்காமல் இருந்த பாவனா, இந்த திரைப்படம் மூலம் மீண்டும் சினிமாவில் நடிக்கிறார்.

கன்னடத்துக்காக, கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன

இது குறித்து நடிகை பாவனா கூறும்போது, ‘ 96 சினிமா எல்லா மொழிக்குமான கதை. அதனால் எனக்குப் பிடித்திருந்தது. நான் இப்போது ஜானுவாகி இருக்கிறேன்.

’96’ ஜானு, மஞ்சள் வண்ண டிரெஸ் அணிந்திருப்பார். நான் கருப்பு மற்றும் பிரவுன் கலர் டிரெஸ் அணிந்து நடிக்கிறேன். எனது ஹேர்ஸ்டைலையும் மாற்றியுள்ளேன். ரசிகர்கள் இதை ஏற்பார்கள் என நம்புகிறேன்’ என்று சொல்லி குஷியாகிறார் பாவனா.

688 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன