சேரன் திருமணம் எனும் படத்தை இயக்கி முடித்திருக்கிறார். பிரானிஸ் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடேட்’ நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் பிரபல நடிகரும், இயக்குநருமான தம்பி ராமையாவின் மகன் உமாபதி ஹீரோவாக நடித்துள்ளார். தவிர, முக்கியக் கதாபாத்திரத்தில் சேரனும் நடித்திருக்கிறார்.

இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதன் மூலம் சுகன்யா, எம்.எஸ்.பாஸ்கர், மனோ பாலா, ஜெயபிரகாஷ் உள்ளிட்டோரும் நடித்திருப்பது தெரிய வந்திருக்கிறது.
இந்நிலையில், விரைவில் படத்தின் வெளியீட்டு தேதியை வெளியிட இருக்கிறார்கள் படக்குழுவினர்.
திருமணம் நடைபெறுவதற்கு முன்னும், அதன் பிறகு ஏற்படும் சிக்கல்களையும் மையமாக கொண்டு படம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த டிரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

பாடலாசிரியர் வைரமுத்து பேசும் போது :
சேரனுக்கு பாட்டெழுதுவது ரொம்ப சிரமம். அதே நேரம் அத்தனை அழகு இருக்கும். நிறம் பார்த்து பாட்டு எழுதி இருக்கிறேன். ஆரிய உதடு உன்னது திராவிட உதடு என்னது என்றும் எழுதியிருக்கிறேன்.
அதே போல தஞ்சாவூர் மண்ணெடுத்து தேவா வரி… அதை தொடர்ந்து எல்லா ஊர் மண்ணையும் எடுத்து சேரனுக்காக எழுதப்பட்ட எழுத்து பாடல் அல்ல…
அது ஒரு வரலாறு.



சேரனின் திருமணம் சில திருத்தங்களுடன் ஆடியோ கமலா திரையரங்குகளில் நடைபெற்றது.
விழா நடைபெறும் இடம் திருமண மண்டபம் போல வாழை மர தோரணங்கள், பந்தல், தவில் மேளதாள இசையுடன் வித்தியாசமான அனுபவத்தை கொடுத்தது
