ஞாயிற்றுக்கிழமை, மே 19
Shadow

அஜித்தின் அடுத்த படத்தை இயக்கப்போகும் வெங்கட் பிரபு!

வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த 2011ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘மங்காத்தா’. இது அஜித்தின் 50-வது திரைப்படம். அஜித் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி பெற்ற படம் இது.

இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என்று அஜித் ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

இந்நிலையில், அஜித்தின் ரசிகர்கள் ஆவலுடன் ‘மங்காத்தா 2′ குறித்த தகவல்களை வெங்கட் பிரபுவிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர் அதிரடியான பதிலை கூறி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார்.

இது பற்றி பேசிய வெங்கட் பிரபு, ‘மங்காத்தா 2′ படத்திற்கு அதிக எதிர்ப்பார்ப்பு உள்ளது. ஆனால், கண்டிப்பாக அஜித்துடன் ஒரு திரைப்படம் பண்ண ஆவலுடன் இருக்கிறேன். மங்காத்தா 2 எடுக்க நான் தயாராக இருக்கிறேன். மேலும் நிச்சயமாக அஜித்துடன் இன்னொரு படமும் பண்ணுவேன் என்று தெரிவித்திருக்கிறார்.

வெங்கட் பிரபுவின் இந்த அறிவிப்பு தல ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. தற்போது போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கும் ‘பிங்க்’ திரைப்படத்தின் ரீமேக்கான ‘தல 59′ திரைப்படத்தில் அஜித் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து போனி கபூர் தயாரிப்பில் மேலும் ஒரு படத்தில் அஜித் நடிக்கிறார்.

அதேபோல், தற்போது வெங்கட் பிரபு, சிம்பு நடிக்கவுள்ள ‘மாநாடு’ திரைப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகளில் பிசியாக இருந்து வருகிறார். மேலும், வெங்கட் பிரபு இயக்கியுள்ள ‘பார்ட்டி’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

392 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன