வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

Tag: வெங்கட் பிரபு

வெங்கட் பிரபு படத்திற்கு வந்த சிக்கல்!

வெங்கட் பிரபு படத்திற்கு வந்த சிக்கல்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
இயக்குனர் வெங்கட் பிரபு அடுத்து இயக்கும் புதிய படம் என்சி22. இப்படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடிக்கிறார். தற்காலிகமாக 'என்சி22' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்ரீநிவாஸா சித்தூரி தயாரிக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். மேலும், இப்படத்திற்கு இந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு கர்நாடகாவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாண்டியா மாவட்டம், மேலுகோட் பகுதியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கோவிலுக்கு அருகில் படக்குழு மதுக்கடை செட் ஒன்று அமைத்து படப்பிடிப்பு நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் கோவிலுக்கு அருகில் விதிகளை மீறி செட் அமைந்துள்ளதாக கூறி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பின்னர்...
வெங்கட் பிரபுவின் அடுத்த படம் ‘என்சி22’!

வெங்கட் பிரபுவின் அடுத்த படம் ‘என்சி22’!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி வெற்றிப்பெற்ற படம் ‘மன்மத லீலை’. வெங்கட் பிரபுவின் 10 வது திரைப்படமான இந்த படத்தில் நடிகர் அசோக் செல்வன் கதாநாயகனாக நடித்து ஸ்மிருதி வெங்கட், சம்யுக்தா ஹெக்டே, ரியா சுமன் உள்ளிட் நடிகைகள் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து வெங்கட் பிரபு அடுத்து இயக்கும் புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நடிகர் நாக சைதன்யா நடிக்கும் புதிய படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளார். தற்காலிகமாக 'என்சி22' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்ரீநிவாஸா சித்தூரி தயாரிக்கவுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இப்படத்தின் சக கலைஞர்கள் பற்றி விரைவில் வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது....
’மன்மத லீலை’ படதிற்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட வெங்கட் பிரபு!

’மன்மத லீலை’ படதிற்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட வெங்கட் பிரபு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மன்மத லீலை’. வெங்கட் பிரபுவின் 10 வது திரைப்படமான இந்த படத்தில் நடிகர் அசோக் செல்வன் கதாநாயகனாக நடித்துள்ளார். ஸ்மிருதி வெங்கட், சம்யுக்தா ஹெக்டே, ரியா சுமன் உள்ளிட் நடிகைகள் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் கதையை இயக்குனர் வெங்கட் பிரபுவின் உதவி இயக்குனர்களில் ஒருவரான மணிவண்ணன் எழுதியுள்ளார். இந்த படத்தின் கதை ஒரு இளைஞனின் வாழ்க்கையில் இரண்டு வெவ்வேறு காலகட்டங்களில் நடக்கும் இரண்டு முக்கிய சம்பவங்களைப் பற்றியது என்றும் இயக்குனர் பாக்கியராஜின் 'சின்ன வீடு' திரைப்பட பாணியில் இருக்கும் என்றும் படத்தின் கதை குறித்து வெங்கட் பிரபு கூறியிருந்தார். பிரேம் ஜி இசையமைத்துள்ள இப்படத்தை ராக்ஃபோர்ட் எண்டெர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. ...
மங்காத்தா கூட்டணியில் சிவகார்த்திகேயன்!

மங்காத்தா கூட்டணியில் சிவகார்த்திகேயன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது 'டான்', 'அயலான்' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். இதையடுத்து தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் தயாராகும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசன் மற்றும் சோனி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் கதை கேட்டுள்ளார். அந்த கதை அவருக்கு பிடித்துப்போகவே ஒப்பந்தமாகியுள்ள திரைப்படங்களில் நடித்து முடித்த பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இருவரும் இணைந்து பணியாற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் 'மன்மத லீலை' என்ற தி...
மாநாடு படத்துக்கு குவியும் விருதுகள்!

மாநாடு படத்துக்கு குவியும் விருதுகள்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மாநாடு படத்துக்கு குவியும் விருதுகள்! ஈஸ்வரன் படத்திற்கு பிறகு சிம்பு நடிப்பில் வெளியான திரைப்படம் ‘மாநாடு’. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்க, சுரேஷ் காமாட்சி தயாரித்து இருந்தார். இப்படத்தில் சிம்புவுடன் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, பாரதிராஜா, பிரேம்ஜி, ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இப்படம் பல தடைக்களை கடந்து நவம்பர் 25ம் தேதி தியேட்டரில் வெளியானது. படம் பார்த்த அனைவரும் சிம்பு மற்றும் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பை பாராட்டி வருகிறார்கள். தற்போது இப்படம் 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்நிலையில், மாநாடு திரைப்படம் நார்வே சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் நான்கு விருதுகளைப் பெற்றுள்ளது. சிறந்த இயக்குனராக வெங்கட் பிரபு, சிறந்த இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா, சிறந்த வில்லன் நடிகராக எஸ்.ஜே.சூர்யா மற்றும் சிறந்த எடிட்டிங்குக்...
புதிய சாதனை படைத்த மாநாடு டிரெய்லர்!

புதிய சாதனை படைத்த மாநாடு டிரெய்லர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
புதிய சாதனை படைத்த மாநாடு டிரெய்லர்! சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இப்படத்தை சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்‌ஷனும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளனர். ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மாநாடு படத்தின் டிரெய்லர் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இந்த டிரெய்லர், தற்போது புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. அதன்படி இப்படத்தின் டிரெய்லர் யூடியூபில் 1 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்று உள்ளது. சிம்பு நடித்த படத்தின் டிரெய்லர் ஒன்று 1 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெறுவது இதுவே முதன்முறை. இதனை சிம்பு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்...
முதன்முறையாக வெங்கட் பிரபுவுக்கு ஜோடியாக நடிக்கும் சினேகா!

முதன்முறையாக வெங்கட் பிரபுவுக்கு ஜோடியாக நடிக்கும் சினேகா!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
முதன்முறையாக வெங்கட் பிரபுவுக்கு ஜோடியாக நடிக்கும் சினேகா! தமிழில் அச்சமுண்டு அச்சமுண்டு, நிபுணன் போன்ற படங்களை இயக்கியவர் இயக்குனர் அருண் வைத்யநாதன். இவர் கல்யாண சமையல் சாதம் என்ற படத்தை தயாரித்து இருக்கிறார். தற்போது அருணாச்சலம் வைத்யநாதன் என பெயரை மாற்றியுள்ள இவர், குழந்தைகளை மையமாக வைத்து உருவாகவிருக்கும் புதிய படத்தை இயக்கவுள்ளார். இப்படத்திற்கு ‘ஷாட் பூட் 3’ என பெயரிடப்பட்டு உள்ளது. இப்படத்தின் மூலம் வீணைக் கலைஞர் ராஜேஷ் வைத்யா இசையமைப்பாளராக அறிமுகமாகவுள்ளார். இப்படத்தில் நடிகை சினேகாவும், இயக்குனர் வெங்கட் பிரபுவும் ஜோடியாக நடிக்க உள்ளனர். இதற்கு முன்னர் வெங்கட் பிரபு இயக்கிய கோவா படத்தில் நடிகை சினேகா நடித்திருந்தாலும், இவர்கள் இருவரும் ஜோடியாக நடிப்பது இதுவே முதன்முறை. மேலும் இப்படத்தில் நடிகர் யோகிபாபுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்....
நிம்மதியா வேலை செய்ய விடுங்கப்பா… வெங்கட் பிரபு கோபம்!

நிம்மதியா வேலை செய்ய விடுங்கப்பா… வெங்கட் பிரபு கோபம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நிம்மதியா வேலை செய்ய விடுங்கப்பா... வெங்கட் பிரபு கோபம்! வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் ‘மாநாடு’. சிம்பு நாயகனாக நடிக்கும் இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சம்பள விஷயத்தில் வெங்கட் பிரபுக்கும், சுரேஷ் காமாட்சிக்கும் தகராறு, படம் பாதியில் நிற்கிறது என்று செய்திகள் வெளியானது. இதையறிந்து கோபமடைந்த வெங்கட் பிரபு "யப்பா சாமி.. ஏன் ஏன் ஏன்.. தயவுசெய்து வதந்திகளைப் பரப்பாதீங்க. மாநாடு படத்தின் வேலைகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. நிம்மதியா வேலை செய்ய விடுங்கப்பா" என்று சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்....
இயக்குனர் வெங்கட் பிரபுவின் அடுத்த படத்தில் 3 ஹீரோயின்கள்!

இயக்குனர் வெங்கட் பிரபுவின் அடுத்த படத்தில் 3 ஹீரோயின்கள்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
வெங்கட் பிரபுவின் அடுத்த படத்தில் 3 ஹீரோயின்கள்! சென்னை 28, மங்காத்தா உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கி பல ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் இயக்குனர் வெங்கட்பிரபு. தற்போது சிம்பு நடிக்கும் ‘மாநாடு’ படத்தை இயக்கி வரும் வெங்கட்பிரபு, அதனை தொடர்ந்து தயாரிப்பாளர் டி.முருகானந்தத்தின் ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தை இயக்க உள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிப்பு வெளியிட்டார். இது அவர் இயக்கத்தில் உருவாகும் 10வது திரைப்படம் ஆகும். இந்நிலையில், அப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி வெங்கட் பிரபுவின் 10-வது படத்தில் நடிகர் அசோக் செல்வன் ஹீரோவாக நடிக்க உள்ளதாகவும், அவருக்கு ஜோடியாக ஸ்மிருதி வெங்கட், ரியா சுமன், சம்யுக்தா ஹெக்டே ஆகிய மூன்று ஹீரோயின்கள் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்திற்கு ப...
மாநாடு படத்தின் பாடல் ரம்ஜான் அன்று வெளியாகாது – தயாரிப்பாளர் அறிவிப்பு!

மாநாடு படத்தின் பாடல் ரம்ஜான் அன்று வெளியாகாது – தயாரிப்பாளர் அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மாநாடு படத்தின் பாடல் ரம்ஜான் அன்று வெளியாகாது - தயாரிப்பாளர் அறிவிப்பு! வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் ‘மாநாடு’. இப்படத்தை வி ஹவுஸ் புரடக்‌‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்‌ஷன் நடித்துள்ளார். மேலும் எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி, எஸ்.ஜே.சூர்யா, டேனியல் போப், ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் பாரதிராஜாவின் மகன் மனோஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் பாடல் வருகிற மே 14-ந் தேதி ரம்ஜான் பண்டிகையன்று வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், இயக்குனர் வெங்கட் பிரபுவின் தாயார் காலமானதால் மாநாடு படத்தின் முதல் பாடல் ரம்ஜான் பண்டிகை அன்று வெளியிடப்படாது என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவிப்...