திங்கட்கிழமை, செப்டம்பர் 14
Shadow

தெலுங்கு பேசப் போகும் ராட்சசன்..!

ராட்சசன் பட தெலுங்கு ரீமேக்கில் அமலாபால் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை அனுபமா பரமேஸ்வரன் ஒப்பந்தமாகியுள்ளார்.

முண்டாசுபட்டி மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ராம்குமார் மீண்டும் விஷ்ணு விஷாலுடன் இணைந்த திரைப்படம் ராட்சசன். இப்படத்தில் அமலாபால், நடிகர் ராதாரவி, ராமதாஸ், நிழல்கள் ரவி, காளிவெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சைக்கோ த்ரில்லர் பாணியில் உருவாகியிருந்த இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

தற்போது இந்தப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது. புதுமுக இயக்குநரான ரமேஷ் வர்மா ரீமேக் செய்யும் இந்தப் படத்தில் பெல்லம் கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ் ஹீரோவாக  நடிக்கிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார்.

இந்நிலையில், அமலா பால் கதாபாத்திரத்தில் நடிக்க  அனுபமா  பரமேஸ்வரன்  ஒப்பந்தமாகியுள்ளார்.  பிரேமம் படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமான இவர், தமிழில் கொடி  படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன