தனுஷ், சாய் பல்லவி நடிப்பில் கடந்து ஆண்டு வெளியான மாரி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் இடம் பெற்ற ரெளடி பேபி பாடல் தொடர்ந்து பல சாதனைகளை படைத்து வருகிறது.
இதுவரை தென்னிந்தியாவிலே அதிக பார்வையாளர்களை கொண்ட முதல் பாடல் என்கிற பெறுமையையும் இந்த வீடியோ பெற்றது. தற்போது 250 மில்லியன் பார்வையாளர்களை எட்டி புதிய சாதனையை படைத்துள்ளது.
இதுவரை தமிழில் வெளியான பாடல்களிலே இந்த பாடல்தான் அதிக பார்வையாளர்களை கொண்ட பாடல். இதற்கு முன்பு தனுஷின் ஒய் திஸ் கொலவெறி பாடல்தான் அதிக பார்வையாளர்களை பெற்றிருந்த பாடலாக இருந்தது. இப்போது ரவுடி பேபி பாடல் 250 மில்லியன் ரசிகர்களை கடந்து புதிய சாதனையை படைத்திருக்கிறது.
இப்படதிற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். தற்போது இந்த பாடலுக்கு பல இடங்களில் இருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.
