ரஜினியின் பாட்ஷா, அஜித்தின் சிட்டிசன் உள்ளிட்ட படங்க்ளில் நடித்து ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை நக்மா.
2000 ஆம் ஆண்டில் பல முன்னனி நாயகர்களுடன் நடித்து வந்து கொடிகட்டி பறந்தார். பின், திரையுலகில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அங்கு அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பதவியும் கொடுக்கப்பட்டது. பின், அது பறிக்கப்பட்டவுடன் , அரசியலில் இனி எடுபடாது என எண்ணிய நக்மா மீண்டும் திரையுலகம் பக்கம் திரும்பியுள்ளார்.
தெலுங்கில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். அதில், அல்லு அர்ஜுனுக்கு அம்மாவாகவும் ஒரு கேரக்டரில் நடித்து வருகிறார் நக்மா. தமிழில் நல்ல படங்கள் வந்தால் நிச்சயம் நடிப்பேன் எனவும் நக்மா கூறியுள்ளார்.
492 Views
