நடிகர்கள்: விஜய் ஆன்டனி, அருந்ததி நாயர் இசை: விஜய் ஆன்டனி தயாரிப்பு: பாத்திமா விஜய் ஆன்டனி இயக்கம்: பிரதீப் கிருஷ்ணமூர்த்தி
முன்ஜென்ம கதை. அமரர் சுஜாதாவின் ‘ஆ’ நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது என்றெல்லாம் வந்த செய்திகள் சைத்தானுக்கு ஒரு வித எதிர்ப்பார்ப்பைக் கிளப்பியது என்னமோ உண்மைதான். எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றியதா சைத்தான்? சாப்ட்வேர் எஞ்ஜினீயர் விஜய் ஆன்டனிக்கும் அருந்ததி நாயருக்கும் திருமணமாகி, வாழ்க்கை சுமூகமாகப் போய்க் கொண்டிருக்கும் நேரத்தில், விஜய் ஆன்டனி மண்டைக்குள் அடிக்கடி ஒரு குரல். அந்தக் குரல் அவரை திரும்பத் திரும்ப தற்கொலைக்குத் தூண்டுகிறது. நண்பர்களால் பிழைக்கிறார். இந்தக் குரலைப் பற்றி தன் மேலதிகாரியிடம் கூற, அவர் மனோதத்துவ மருத்துவரிடம் அழைத்துப் போகிறார்.

காமெடியன் இல்லாத குறையைத் தீர்க்கிற மாதிரி ஒரு கேரக்டர் வில்லனுக்கு! பின்னணி இசையில் மிரட்டி இருக்கும் விஜய் ஆன்டனி, ஒரு பாடலில் மட்டும் ஜெயித்திருக்கிறார். மற்ற பாடல்கள் நான்கைந்து இன்டர்வெல்லுக்கு சமம்.
முதல்பாதி சுவாரஸ்யமாக இருந்தாலும், ரசிகர்கள் மனசில் நிற்கவேண்டிய இரண்டாம்பாதி சவசவ வென கடந்து போவதால், படம் குறித்து எந்த அபிப்பிராயமும் இல்லாமல் வெளியில் வரவேண்டியிருக்கிறது.
