
*வீரத்திருவிழா – 100*
*சீர்மரபினர் நலச்சங்கம் சார்பில் கடந்த 2015 – வது ஆண்டு முதல், யுத்தம் நடைப்பெற்ற வரலாற்று சிறப்பு மிக்க உசிலம்பட்டி அருகே உள்ள பெருங்காமநல்லூர் மன்னில் வருட வருடம் வீரத்திருவிழா மிகப் சிறப்பாக நடைபெற்று வருகிறது.*
*பிரமலைக்கள்ளர்கள்பெருங்காமநல்லூரில் ஆங்கிலேயர்களிடம் 03.04.1920 ல் கைரேகை வைக்கமாட்டோம் என்று எதிர்ப்பு காட்டிய விடுதலைப் போரில் 17 வீரத்தியாகளின் உயிர் தியாகம் செய்ததின் 100 ஆம் ஆண்டு துவக்கம்.*
*படுகாயம் அடைந்த தியாகிகளுக்கு தண்ணீர் கொடுத்த வீரத்தாய் மாயக்கா நிறைமாத கர்பிணியும்
அதில் பலியானார்.*
*இந்த 100 ஆண்டு துவக்க விழாவை வீரம் விளைந்த பெருங்காமநல்லூர் மண்ணில் கொண்டாட, சீர்மரபினர் நலச்சங்கம் எடுத்த முயற்சிக்கு, கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டது தான் மிகவும் சோதனை.*

*சோதனைகளை கடந்து ஒரு 15 மணி நேரத்தில் மாற்று ஏற்பாடு செய்து, அதே 100 ஆண்டு துவக்க விழாவை உசிலம்பட்டி தேவர் அய்யா கல்லூரி அருகே உள்ள MM யோகாஸ்ரீ திருமண மண்டபத்தில் 02.04.2019 -ம் தேதி மதியம் 2.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை,சீர்மரபினர் நலச்சங்கத்தின், தலைவர், டாக்டர் ஜெயமணி தலைமையில் நடைப்பெற்றது.
சுமார் 1000 அதில் பெண்கள் 500, ஆண்கள் 350, சிறுவர் சிறுமியர் 150 கலந்து கொண்டனர்.
*சிறப்பு விருந்தினர்கள், காவல் தெய்வம், முனைவர் மு. ராஜேந்திரன், IAS, மாவட்ட நீதிபதி ஸ்ரீதர்,
அய்யா அய்யாக்கண்ணு, தலைவர், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கம், டாக்டர் சாம். இளங்கோ, திண்டுக்கல், முனைவர் இதயகீதம் ராமானுஜம், பொது செயலாளர், தமிழ்நாடு பத்திரிக்கை எழுத்தாளர் சங்கம். முனைவர் சூரியா, பேராசிரியர், ஓய்வு, அண்ணாமலை பல்கலைக்கழகம். வீரத்தியாகிகளைப்பற்றியும், வீரத்தாய் மாயக்காவை பற்றியும், மண்ணின் பெருமை குறித்தும், ஆங்கிலேயர்களின் அடக்கு முறை அதனால் ஏற்பட்ட பாதிப்புக்குள்ளானது பற்றியும் பேசினார்கள்.*

*விழாவில் 11 உறவினர்களுக்கு, கல்வி பணி, இலக்கிய பணி, சமூக பணிக்காக விருதுகள் வழங்கப்பட்ட்து. அனைவரும் தங்களின் சேவை பணியை குறித்து பேசினார்கள்.*
*சிலப்பாட்ட சிறுவர்கள், சிறுமியர்கள் அனைவருக்கும், விருது வழங்கப்பட்டது.*
*விழா முடிந்தவுடன் மண்டபம் முகப்பில், சிலம்பாட்டம் நிகழ்சி நடைப்பெற்றது.*
*8- வது நாடாகிய தும்பகுண்டில் தாய்மார்கள், காப்பு கட்டி, விரதம் இருந்து, முளைப்பாரியை வளர்த்ததை, சிறப்பு விருந்ததினர்கள் பார்வையிட சென்றனர், அப்போது தாய்மார்கள் குளைவி சத்தம் போட்டு அவர்களை வரவேற்றனர்.*
*மாலை 6.20 மணிக்கு, பெருங்காமநல்லூர் கோவிலிருந்து, வீரவணக்கம் செலுத்த புறப்பட்டனர்.*
*முதல் அணிவகுப்பு சிறுவர், சிறுமியர்கள் இரண்டு வரிசையிலிருந்து சிலப்பம் சுற்றிய படியே அந்த மஞ்சள் நிற உடை, மஞ்சள் முண்டாசு கட்டி நடந்து சென்றதும்.*

*இரண்டாவது அணிவகுப்பு, தாய்மார்கள் பச்சை பசேரென்று முளைப்பாரியை தலையில் சுமர்ந்து கொண்டு ஒரே வரிசையில் ஒன்றன் பின் ஒன்றாக ஒருவர் பின் ஒருவர் நடந்து சென்றதும் அவர்களுக்கு, அரணாக இரண்டு பக்கமும் தாய்மார்கள் அணி வகுத்து நடந்து சென்றதும், நேதாஜியின் ஜான்சி பெண்கள் படை வீரர்கள், வீரத் தியாகிகளுக்கு உரிய மரியாதை செய்ய நடந்து செல்லும் அணி வகுப்பு மாதிரி போல் இருந்தது.*
*மூன்றாம் அணியாக சிறப்பு விருந்தினர்கள், முக்கிய நபர்கள் அணிவகுத்தும் நடந்து சென்றதும்.*
*நான்காம் அணியாக சீர்மரபினர் நலச்சங்கம் நிர்வாகிகள், 8 நாட்டு உறவினர்கள் ஒன்று சேர்ந்து நடந்து சென்றதும்*
*இவைகள் எல்லாம் மிக நேர்த்தியாக இயற்கையாக அமைந்தது, 4 அணிகளுக்கும் தலைவர்கள் இல்லை எல்லோரும் தலைவராக வீர வணக்கம் செலுத்த சென்றனர்.*

*சிறிது நேரம் முளைப்பாரியை கேட்டின் வாசலியே வைத்திருந்து, பின்பு நினைவு தூபி இருக்கும் இடத்தில் முளைப்பாரியை வைத்தும், குலவி சத்தம் போட்டும், சிறப்பு விருந்தினர்கள், ஸ்பிக்கு மாலை அணிவித்தும். பின்பு வீரவணக்கம் செலுத்தியும், 100 – வது ஆண்டு துவக்க விழா இரவு 7.30 மணிக்கு இனிதே முடிவுற்றது. உரிய காவல் துறை பாதுகாப்பு, துணை கண்காணிப்பாளர், ஆய்வாளர், உதவி ஆய்வாளர், போதிய காவலர்கள் வருவாய் வட்டாச்சியர் உடன் இருந்தனர்.*
சநிகழ்ச்சிகள் அனைத்தும் தமிழ் ஒளி தமிழரசன் நேரலை ஒளிபரப்பு செய்தார். நிகழ்ச்சிகள் ஆவணப்படுத்தப்பட்டது. உலகெங்கும் உறவுகள் கண்டுகளித்தனர்.*
*சீர்மரபினர் நலச்சங்கத்தின், அடுத்த இலக்கு, OBC யில் DNT மக்களுக்கு உள் ஒதுக்கீடு.*
பி.கே.துரைமணி,
*சீர்மரபினர் நலச்சங்கம்.*
