குப்பத்துராஜா விமர்சனம்

21 Views

வியாசர்பாடி ஏரியாவில் சிறு சிறு குறும்புகளை செய்து கொண்டும், குடிகார பாசக்கார அப்பா எம் எஸ் பாஸ்கருக்கு நல்ல மகனாகவும், காதலிக்கு நல்ல காதலனாகவும், பார்த்திபனை தன் வில்லன் என்று நினைத்துக் கொண்டும் வரும் கதாபாத்திரம் தான் நம்ம ராக்கெட்(ஜி வி பிரகாஷ்).

எம் ஜி ராஜேந்திரன்(எம் ஜி ஆர்) என்ற கதாபாத்திரத்தில் வருகிறார் பார்த்திபன். எம் ஜி ஆர் என்ற பெயருக்கு ஏற்றாற்போல் குழந்தையின் காது குத்து விழாவில் ஆரம்பித்து அந்த ஏரியாவில் நல்லது கெட்டது என அனைத்திற்கும் உதவி செய்பவர் பார்த்திபன்.

காதல், கலாட்டா என ராக்கெட் வாழ்க்கை நகர, ஒருநாள் அவர்கள் ஏரியாவில் கலகலவென சுற்றித்திரிந்த பள்ளி சிறுவன் காணாமல் போகிறான், அதிலிருந்து சில நாட்களில் எம் எஸ் பாஸ்கர் கொலை செய்யப்படுகிறார்.

தனது அப்பாவை இழந்து, செய்வதறியாது கலங்கி நிற்கிறார் ஜி வி பிரகாஷ். தனது அப்பாவை கொன்றது யார் என்று கண்டுபிடிக்க கிளம்புகிறார். கொலைகாரனை ஜி வி பிரகாஷ் கண்டுபிடித்தாரா..பார்த்திபன் என்ன செய்தார்.. இதற்கு அப்புறம் நடக்றது க்ளைமேக்ஸ்.

வியாசர்பாடி பையனாக தனது கேரக்டரை கலக்கி எடுத்திருக்கிறார் ஜி வி பிரகாஷ். இவரை தவிர வேறு யாருக்கும் இந்த கதாபாத்திரம் பொருந்திருக்காது என்றே சொல்லலாம். காமெடி, காதல், ஆக்‌ஷன் என ஒரு இடம் விடாமல் எல்லா இடத்திலும் பட்டையை கிளப்பியிருக்கிறார் ஜி வி பிரகாஷ்.

ஜி வி பிரகாஷின் நாயகியாக நடித்துள்ளார் பாலக் லால்வாணி. தமிழ் தெரியாது என்பதால். லிப் சிங்க் ஆகவே இல்லை. படத்தின் பெரிய மைனஸ் என்றால் நாயகி தான்.

பூனம் பஜ்வா படம் முழுவதும் கவர்ச்சியை வாரி இறைத்துள்ளார். அதற்கு மட்டுமே அவர் பயன்பட்டுள்ளார்.

படத்திற்கு மிகப்பெரிய பலம் என்றால் அது பார்த்திபனும் எம் எஸ் பாஸ்கரும் தான். யதார்த்த நடிப்பால் அனைவரையும் ஈர்க்கின்றனர் இருவரும். அதிலும் எம் எஸ் பாஸ்கர் தான் ஓரு தேர்ந்த நடிகர் என்பதை ஒவ்வொடு பிரேமிலும் நிறுத்தியிருக்கிறார்.

பார்த்திபனின் வில்லன் கலந்த ஹீரோயிசம் மிரட்டல். ஒளிப்பதிவு மற்றும் ஆர்ட் ஒர்க் படம் முழுவதும் பேசப்படும். படத்தினை தாங்கி பிடித்தது இரண்டும் தான்.

ஜி வி பிரகாஷின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம், பின்னனி இசை கதையோடு நகரும் பயணம்.

 

சமூகத்தில் குறிப்பாக வட சென்னை பகுதியில் பிடிபட்ட போதை மிட்டாய்கள் குறித்து இந்த படம் பேசுகிறது.

மொத்தத்தில் குப்பத்துராஜா சொல்லவேண்டிய கதை!

கோடங்கி மதிப்பீடு : 3/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *