புதன்கிழமை, நவம்பர் 11
Shadow

ரூ.5 கோடி செலவில் செட்டப் புட்பால் மைதானம் … அட்லியின் விஜய்63 ஸ்பெஷல்!

ரூ.5 கோடி செலவில் செட்டப் புட்பால் மைதானம் … அட்லியின் விஜய்63 ஸ்பெஷல்!

தளபதி 63 படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதம் தொடங்கி சென்னையில் பல்வேறு இடத்தில் நடைபெற்று வருகிறது. மேலும் ஷூட்டிங் தொடங்கி 2 மாதத்தில் 60% படப்பிடிப்பு முடிவுயடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கால்பந்தை மையமாக கொண்டு உருவாகிவரும் இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பிக்காக சென்னையில் உள்ள ஈவிபி ஸ்டுடியோவில் பிரமாண்டமாக கால்பந்தாட்ட அரங்கம் தயாராகி வருகிறது. அப்பணிகள் முடிந்த பின் தொடர்ந்து 50 நாட்கள் அங்கு தான் படப்பிடிப்பு நடக்கவுள்ளது. இந்த அரங்கம் தயாரிப்புப் பணிகளின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

இந்த மைதானம் அமைக்க செலவு மட்டும் ரூ.5 கோடியாம்.

அம்மாடி… ஒரு சினிமா பட்ஜெட்டில் ஒரு ஷூட்டிங் ஸ்பாட் செலவான்னு வாய பொளக்காதீங்க… அட்லி டைரக்டரு… விஜய் நடிகரு… அப்ப செலவும் இப்படி தான இருக்கும்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன