
காமெடியன் ஆகி ஹீரோ ஆன நடிகர்களின் வரிசையில் புதிதாக இணைந்திருப்பவர் யோகிபாபு. இப்போது யோகிபாபு இல்லாத படங்களே இல்லை என்ற நிலை தமிழ் சினிமாவில் உள்ளது.
நடிகர் யோகி பாபு. இவர் தற்போது ஜினியின் ‘தர்பார்’, ‘விஜய்யின் ‘தளபதி 63’ உள்பட பல 18 படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி காமெடி ஜானரில் உருவாகும் படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.

இவர் ஹீரோவாக நடிக்கவிருக்கும் படத்தில் அவரே கதை, கதை, திரைக்கதை வசனம் எழுதுகிறார்.
இன்னும் பெயரிடாத இப்படத்தை இயக்குநர் ராஜேஷ் உதவியாளர் ராஜசேகர் இயக்கவுள்ளார். ஏற்கனவே யோகிபாபு லொள்ளுசபாவிற்கு காமெடி ஸ்க்ரிப்ட் எழுதிய அனுபவம் உள்ளவர் என்பதால் அவரது ஸ்க்ரிப்டில் உருவாகும் காமெடிக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

568 Views
