வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26
Shadow

கிராமத்து கிரிக்கெட் வீரர்களை நெகிழ வைத்த சிவகார்த்திகேயன்

 

இயக்குனர் பொன்ராம் & இயக்குனர் M.P.கோபி அவர்களின் சொந்த ஊரான உசிலம்பட்டியில் அவர்கள் படித்த அரசு மேல் நிலைப்பள்ளியில், உசிலம்பட்டி வட்டார இளைஞர்களையும் மாணவர்களையும் ஊக்கு விப்பதற்காக ஒரு மாபெரும் இரண்டு நாள் கிரிக்கெட் விழா நடத்தினர். அதில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த பதினாறு அணிகள் கலந்து கொண்டனர்.

இதில் வெற்றி பெற்ற அணிக்கு திரைப்பட நடிகர் தயாரிப்பாளர் திரு.சிவகார்த்திகேயன் அவர்கள் அணியினரை சென்னைக்கு வரவழைத்து STUDIO GREEN ஞானவேல்ராஜா தயாரிப்பில் ராஜேஷ்.M இயக்கத்தில் உருவாகி வரும் மிஸ்டர் லோக்கல் படப்பிடிப்பில் மதியம் விருந்தும் விருதும் கொடுத்து அவர்களை கௌரவப்படுத்தினார்.

கிராமத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த எங்களுக்கு சென்னையில் திரு.சிவகார்த்திகேயன் அவர்களின் கரங்களால் விருது வழங்கியதை நினைத்து பெரும் அகிழ்ச்சியடைகிறோம் என்று வெற்றி பெற்ற அணியினர் கூறினர்.

இதை பற்றி இயக்குநர்கள் பொன்ராம் & M.P கோபி அவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்றால் ,நாங்கள் படித்த அரசு மேல்நிலைப் பள்ளிக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஒரு விழா நடத்த வேண்டுமென்று ரொம்ப நாள் ஆசை.. அப்போதுதான் திரு.சிவகார்த்திகேயன் அவர்களின் தயாரிப்பில் வெளிவந்த கனா படம் எங்களுக்கு தூண்டுதலாக இருந்தது. அந்த ஸ்பார்க்கில் எங்கள் ஊரில் கிரிக்கெட் மேட்ச் நடத்தலாம் என்று முடிவு எடுத்தோம்.

262 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன