
அங்கிள் பாய் ஆக போய் சிங்கிள் ஸ்லிம் பாய் ஆக திரும்பிய சிம்பு..!
அங்கிள் போல் தோற்றமளித்த நடிகர் சிம்பு இரண்டே மாதங்களில் பெருமளவில் உடல் எடையைக் குறைத்து ஸ்மார்ட் பாய் லுக்குக்கு மாறியுள்ளார். இது உண்மையில் சிம்புவா அல்லது இவ்வளவு நாளும் இன்னொரு தம்பியை மறைத்து வைத்திருந்தாரா என்று ஆச்சரியப்படும் அளவுக்கு அவரது தோற்றம் உள்ளது

நடிகர் சிம்பு ’வந்தா ராஜாவா தான் வருவேன்’ படத்தை தொடர்ந்து தனது செகண்ட் இன்னிங்ஸ்காக தீவிரமாக இறங்கியுள்ளார். சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு அவரது உடல் எடை பலத்த கிண்டலுக்கு ஆளாகிக்கொண்டிருந்தது. அந்நிலையில் வந்தா ஸ்லிம்மாத்தான் வருவேன் என்ற சபதத்துடன் லண்டன் சென்ற சிம்பு விடாமல் ஜிம்முக்குச் சென்று சுமார் 20 கிலோ வரை எடையைக் குறைத்தார்.
மாநாடு படத்தில் நடிக்கவுள்ளதால் தனது உடல் எடையை குறைக்க லண்டன் சென்றிருந்ததால் மக்களவை தேர்தல் கூட வாக்களிக்க வரவில்லை. அந்த அளவிற்கு பிஸியாக உடற்பயிற்சியில் இறங்கியிருந்தார்.
தம்பியின் திருமணத்திற்காக சென்னைக்கு விசிட் அடித்துள்ளார். நீண்ட நாட்கள் பிறகு சிம்புவை பார்த்து ஆச்சரியப்படாத ஆட்களே இல்லை என்று கூட சொல்லலாம். ஏனென்றால் அந்த அளவிற்கு உடலை ஸ்லிம்மாக மாற்றி தனது ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். வெள்ளை நிற ஜிப்பாவில் செம ஸ்லிம்மாக இருக்கும் புகைப்படத்தை தனது முகநூல் பக்கத்தில் ‘மாநாடு’ படத் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பதிவு செய்துள்ளார்.
இனி இவர் சிம்பு இல்லை ஸ்லிம்பு..!
