செவ்வாய்க்கிழமை, மே 14
Shadow

ஏ.ஆர்.ரஹ்மான் மீது கான்செப்ட் திருட்டு புகார் கூறும் திரை பிரபலம்… ஷாக் ஆன கோலிவுட்..!

கேன்ஸ் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான், விக்னேஷ் சிவன்

சர்வதேச அளவில் பிரபலமான 72-வது கேன்ஸ் திரைப்பட விழா நேற்று கோலாகலமாக தொடங்கியது.

இந்த வருடம் உலகம் முழுவதிலும் இருந்து வந்த மொத்தம் 1,845 முழு நீளப் படங்களில் 47 படங்கள் அதிகாரப்பூர்வ போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இந்த இறுதிப் பட்டியலில் இந்தியப் படமும் எதுவும் இடம்பெறவில்லை.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இயக்கி இசையமைத்து வரும் விர்ச்சுவல் ரியாலிட்டி படமாக உருவாகிக்கொண்டிருக்கும் `லே மஸ்க்‘ ஆங்கிலப் படத்தில் இருந்து `சென்ட் ஆப் தி சாங்’ என்ற பாடலை வெளியிட கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு சென்றுள்ளார்

அதேபோல் இயக்குநர் விக்னேஷ் சிவனும் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

ஏ.ஆர்.ரஹ்மான் செனட் ஆப் தி சாங் வெளியிட கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு போயிருக்கும் நிலையில் தமிழ் பட இயக்குனரும் தயாரிப்பாளரும் நடிகருமான பாபுகணேஷ் திடீரென ரஹ்மான் மீது குற்றம் சுமத்தி இருக்கிறார்.

அதிலும் கான்சப்ட் திருட்டில் ரஹ்மான் ஈடுபட்டிருக்கிறார். எனது உழைப்பில் உருவான ஒரு புது முயற்சியை தான் கண்டுபிடித்தது போல ரஹ்மான் அறிவித்திருப்பது வேதனையாக இருக்கிறது.


2012ம் ஆண்டிலேயே தாழம்பூ என்ற எனது படத்தில் படம் பார்க்கும்போது வாசனை வரும் புதிய முயற்சியை செய்து காட்டி இருக்கிறேன்.

இப்போது மீண்டும் எனது தயாரிப்பில் ரிலீஸ் ஆக உள்ள காட்டுப்புறா படத்திலும் இதே தொழில்நுட்பம் பயன் படுத்தி இருக்கிறேன்.

இந்த வாசனை உணரும் விஷயத்தை முதல் முதலில் நான் அறிமுகம் செய்து அதற்காக லிம்கா சாதனை, ஆசிய சாதனை புத்தகங்களில் எனது கண்டுபிடிப்பு இடம் பெற்று உள்ளது.

உண்மை இப்படி இருக்க எனது வாசனை கண்டுபிடிப்பை தனது கண்டுபிடிப்பு என ரஹ்மான் கூறியிருப்பது அதிர்ச்சியாகவும் வேதனையாகவும் இருக்கிறது என்கிறார் பாபுகணேஷ்.

இது தொடர்பாக கவுன்சில், கில்டு,சேம்பர் ஆகிய இடங்களில் ரஹ்மான் மீது புகார் கொடுத்து இருக்கிறார் பாபுகணேஷ்.

ரஹ்மான் கேன்ஸ் திரைப்பட விழா முடிந்து ரஹ்மான் சென்னை திரும்பிய பின் இந்த அறிவு திருட்டு விவகாரம் விஸ்வரூபம் எடுக்குமாம்.

 

345 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன