செவ்வாய்க்கிழமை, மே 19
Shadow

ஜி.எஸ்.டிக்கு எதிராக டி.ஆர். நாளை ஆர்ப்பாட்டம்..!

ஜி.எஸ்.டிக்கு எதிராக ஆரம்பம் முதலே குரல் கொடுத்து வரும் டி.ஆர், நாளை காலை 10.30 மணிக்கு பிலிம்.சேம்பர் முன் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளார்.

இதுகுறித்து அவரது அறிக்கையில், “ மத்திய அரசின் ஜி.எஸ்.டியும் 30% கேளிக்கை வரியும் சேர்ந்தால் தமிழ்த்திரையுலகம் முற்றிலும் அழிந்துவிடும். ஆகவே, தமிழ் சினிமாவை

இந்த இக்கட்டான சூழலில் இருந்து காப்பாற்ற சினிமாவை நேசிக்கும், சினிமாவைக் காப்பாற்றத்துடிக்கும் அத்துனை சினிமா கலைஞர்களும்.நாளை  நடைபெறவிருக்கும் ஆர்ப்பட்டத்தில் கலந்துகொள்ளவேண்டும்.

சினிமாவை நம்பி வரும் இளைஞர்கள் மற்றும் புதிய திறமைகளுக்கு உத்திரவாதமான சூழ்நிலையை ஏற்படுத்தி ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் காப்பாற்றும் பொறுப்புடன் நாளை நடைபெறவிருக்கும் ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளவேண்டும்..” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்துடன் பத்திரிக்கை, தொலைக்காட்சி மற்றும் இணையதள உடகவியலாளர்களும் திரளாகக் கலந்துகொள்ளவேண்டுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

412 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன