
அஜித்தின் அடுத்த படமான தல 60 படத்தையும் எச்.வினோத் இயக்க, போனி கபூர் தயாரிக்கிறார்.
அஜித்திடம், வினோத் அரசியல் கலந்த திரில்லர் கதை மற்றும் ஆக்ஷன் கதை ஒன்றையும் கூறினாராம். அரசியல் கதைக்கு நோ சொன்ன அஜித், ஆக்ஷன் கலந்த திரில்லர் கதைக்கு சம்மதம் சொல்லி இருக்கிறார்.
இந்த கதையில் போலீஸ் அதிகாரியாக வந்தாலும் சமூக பிரச்சினைகள் குறித்து பேசுவாராம்.
சமீபத்தில் ஆந்திர தேர்தலில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பதவியை ராஜினாமா செய்து விட்டு தேர்தலில் நின்ற எம்பி ஆன இன்ஸ்பெக்டர் நிஜக்கதை மிக வைரல் ஆனது.
ஒரு அரசியல்வாதியை எதிர்த்து பதவியை ராஜினாமா செய்து விட்டு தேர்தலில் நின்று அந்த இன்ஸ்பெக்டர் எம்.பி.ஆக வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
அஜீத் படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.
474 Views
