செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 4
Shadow

தண்ணீர் இல்லாமல் இருக்க முடியாதா என் பாடல்களில் தானே வாழ்கிறீர்கள் – இசை நிகழ்ச்சியில் இளையராஜா சர்ச்சை பேச்சு

தண்ணீர் இல்லாமல் இருக்க முடியாதா என் பாடல்களில் தானே வாழ்கிறீர்கள் – இசை நிகழ்ச்சியில் இளையராஜா சர்ச்சை பேச்சு

இசைஞானி இளையராஜா இசை நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. ராயல்டி பிரச்சினைகளுக்கு பின் எஸ்.பி.பி. மீண்டும் இளையராஜா இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இந்த இசை நிகழ்ச்சிக்கு ஆயிரம் ரூபாய் முதல் 10ஆயிரம் ரூபாய் வரை டிக்கெட் விற்பனை செய்யப்ப்ட்டது.

இத்தனை ஆயிரங்களில் டிக்கெட் விலை விற்கப்பட்டாலும் ரசிகர்களுக்கு அடிப்படை வசதிகள் கூட நிகழ்ச்சி நடத்தியவர்கள் செய்யவில்லை.

சரியான குடிநீர் வசதி இல்லை. கழிப்பறை வசதிகள் இல்லை. பாதுகாப்பு சுத்தமாக இல்லை.
அதிலும் ஆயிரம் ரூபாய் டிக்கெட் வாங்கியவர் 10 ஆயிரம் ரூபாய் டிக்கெட் வாங்கியவர்களுக்கான இருக்கைகளை பிடித்து கொண்டதால் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கியவர்களுக்கு சீட் கிடைக்காமல் நின்றனர்.

இத்தனை சிரமங்களை தாண்டி இளையராஜாவின் இசையில் மெய் மறக்க காத்திருந்த ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்தை சந்தித்தனர்.

நிகழ்ச்சி 6 மணிக்கு என்று அறிவித்து தொடங்கியதே 8 மணிக்குதான். காரணம் போக்குவரத்து நெரிசலில் எஸ்.பி.பி. அங்கு வந்ததே 8 மணிக்குதான்.

எல்லாம் சரி 8 மணியில் இருந்து நிகழ்ச்சி ரம்யமாக போச்சா என்றால் அதுவும் இல்லை.

நிகழ்ச்சியில் காசு கொடுத்து வாங்க கூட தண்ணீர் பாட்டில்கள் கிடைக்கவில்லை. அதைவிட 50 ரூபாய்க்கு விற்கப்படும் குளிர்பானங்கள் 500 ரூபாய்க்கு கொள்ளை லாபத்தில் விற்பனை செய்ததுதான் ரசிகர்களை கொந்தளிக்க வைத்தது.

இவை எல்லாம் தாங்கி கொண்டு இசை நிகழ்ச்சி கேட்டுக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு இளையராஜாவின் திடீர் ஆணவ பேச்சு பயங்கர அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அப்படி என்ன பேசினார் இளையராஜா…

விஷயம் இதுதான்… “இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போது ரசிகர் ஒருவர் தண்ணீர் கேட்டதால் இன்னொருவர் அதை வாங்கி வந்து கொடுக்க எழுந்து சென்றிருக்கிறார். இசை நிகழ்ச்சியில் இடையூறு செய்வது போல எழுந்து சென்ற ரசிகரை பார்த்து இளையராஜாவே கேள்வி கேட்க… அவரும் தண்ணீர் தாகத்தால் எழுந்து சென்றேன் என்றார்.
இதைக் கேட்டு ஆவேசம் அடைந்த இளையராஜா ” நான் 5 மணி நேரமாக மேடையில் நிற்கிறேன். நீங்கள் யாராவது நிற்க முடியுமா… என் பாடல்களில் தானே வாழ்கிறீர்கள். உங்களுக்கு இசை நிகழ்ச்சி நடத்ததானே வந்தேன். தண்ணீர் இல்லாமல் இருக்க முடியாதா” என கொந்தளித்தார்.

இளையராஜாவின் இந்த ஆணவ சர்ச்சை பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே பலமுறை இது போல தான் என்கிற ஆணவத்தில் அதிலும் சினிமாவில் மிக பிரபலம் தான் என்ன பேசினாலும் அதை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கருத்தை அடிக்கடி இளையராஜா பேச்சில் பார்கலாம்.

1,444 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன