திங்கட்கிழமை, ஆகஸ்ட் 3
Shadow

பிரமாண்டமான சொகுசு கப்பல் தறிகெட்டு ஓடி விபத்து – வெனீஸ் பரபரப்பு

 

இத்தாலியில் பயணிகள் படகு மீது பெரிய சொகுசு கப்பல் மோதி ஏற்பட்ட விபத்தில் 5 பேர் காயமடைந்தனர். இத்தாலியின் வெனிஸ் நகரித்தின் கியுடெக்கா (Giudecca) கால்வாயை நோக்கி 2 ஆயிரத்து 679 பயணிகளுடன்
275 மீட்டர் நீளமும், 54 மீட்டர் உயரமும் கொண்ட பிரமாண்டமான பெரிய சொகுசு கப்பல் ஒன்று சென்றுள்ளது.

அப்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக கட்டுப்பாடை இழந்த அந்த கப்பல் அந்த பகுதியில் இருந்த பயணிகள் படகில் மோதி பின் கப்பல் நிறுத்தும் இடத்தின் தடுப்பில் மோதியது.

இந்த விபத்தின் போது அங்கே இருந்தவர்கள் எடுத்த வீடியோவில் பிரமாண்டமான சொகுசு கப்பல் கட்டுபாட்டை இழந்து தடுப்பை நோக்கி வருவதும், எதிரே இருந்த சின்னசிறிய படகை இடித்து தள்ளியதையும் பார்த்து பலர் பயந்து ஓடும் காட்சிகள் பதிவாகி உள்ளன.

எதிர்பாராமல் நடைபெற்ற இந்த விபத்தில் 5 பேர் காயம் அடைந்ததாகவும் இதுகுறித்து விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

 

725 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன