திங்கட்கிழமை, செப்டம்பர் 21
Shadow

10ம் தேதி கனமழை பெய்யும் – கேரளாவுக்கு ‘ஆரஞ்சு எச்சரிக்கை’

 

10ம் தேதி கனமழை பெய்யும் – கேரளாவுக்கு ‘ஆரஞ்சு எச்சரிக்கை’

கேரளாவில் அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ளது.

மேலும், கேரளாவில் உள்ள திருவனந்தபுரம், கொல்லம், ஆழப்புழா, எர்ணாகுளம் ஆகிய 4 மாவட்டங்களில் வரும் 10ம் தேதியன்று மிக கனமழை பெய்யும் எனவும் அதற்கான ‘ஆரஞ்சு எச்சரிக்கை’ அறிவிப்பையும் பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ளது.

அதே நேரம் தமிழகம் கடும் வறட்சியில் சிக்கி தவிக்கிறது. குறிப்பாக சென்னை முழுதும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது.
மழை ஒரு சொட்டு கூட பெய்யாமல் பொய்த்து வருகிறது குறிப்பிடதக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன