வெள்ளிக்கிழமை, மார்ச் 29
Shadow

வெள்ளை தலைமுடி, மீசை தாடிக்கு குட் பை சொல்லி மிஸ்டர் கிளீன் ஆக ஸ்டெய்லாக மாறிய அஜீத் லேட்டஸ்ட் லுக்…

 

வெள்ளை தலைமுடி, மீசை தாடிக்கு குட் பை சொல்லி மிஸ்டர் கிளீன் ஆக ஸ்டெய்லாக மாறிய அஜீத் லேட்டஸ்ட் லுக்…

நேர்கொண்ட பார்வை’ படத்தை முடித்த அஜித் அடுத்தப் படத்திற்கு தயாராகி விட்டார். வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாக உள்ள ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இன்று படத்தின் டிரைலர், செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தை ஜாம் ஆக்கியது.

இந்த மகிழ்ச்சியோடு அடுத்து அவர் லேட்டஸ்ட் லுக் வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதை தொடர்ந்து மீண்டும் போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிக்க இருக்கும் படத்தையும் இயக்குநர் வினோத் தான் மீண்டும் இயக்குகிறார். இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

அதே சமயம், பைக் ரேஸ் சம்மந்தமான கதை என்றும் செய்திகள் வெளி வந்தது.

இந்த நிலையில், ’நேர்கொண்ட பார்வை’ படத்திற்காக வைத்திருந்த வெள்ளை தாடி மீசை தலைமுடி லுக்கை முற்றிலும் மாற்றி புதிய லுக்கிற்கு படு ஸ்டெலாக அஜித் மாறியுள்ளார்.

வெள்ளை மீசை மற்றும் தாடி இல்லாமல், முடியும் ரொம்ப ஷாட்டாக வெட்டிக் கொண்டு அஜித் கிளாஸாக ஹாலிவுட் நடிகர் போல இருக்கும் அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பர பரப்பாக வைரலாகி வருகிறது.

1,032 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன