செவ்வாய்க்கிழமை, மே 14
Shadow

சமந்தாவுக்காக டப்பிங் பேசி மீண்டும் பணிக்கு திரும்பிய சின்மயி..!

 

கவிஞர் வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டு எழுப்பியதும் திரையுலகில் சர்ச்சை பெண்ணாக சித்தரிக்கபட்டவர் சின்மயி.

சிறந்த பாடகி அதே போல சிறந்த பின்னணி குரல் கலைஞர் என்பதால் பல முன்னணி ஹீரோயின் பலருக்கு டப்பிங் குரல் கொடுத்து வந்தார்.

வைரமுத்து சர்ச்சைக்கு பின் டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து சின்மயி திடீரென நீக்கப்பட்டார்.

இதனால் அவரை யாரும் டப்பிங் பேசவோ, பாடவோ அழைக்காமல் இருந்தார்கள். இந்த சர்ச்சையில் சிக்குவதற்கு முன் 96 படத்தில் திரிஷாவுக்கு டப்பிங் பேசினார்.

இதுகுறித்து சின்மயி கூறும்போது, “டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் என்னை நீக்கிவிட்டனர். அதனால் தமிழ் படங்களுக்கு பின்னணி குரல் கொடுக்க முடியாது. சங்கத்துக்கு இரண்டு ஆண்டுகளாக சந்தா கட்டவில்லை என்றும் அதனால் நீக்கி விட்டதாகவும் காரணம் சொல்கிறார்கள். சந்தா கட்டாதது குறித்து எனக்கு தகவல் வரவில்லை” என்றார். பின்னர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து தடை உத்தரவு பெற்றார். ஆனாலும் டப்பிங் பேச யாரும் அவரை அழைக்கவில்லை.

இந்த நிலையில் சமந்தா நடிப்பில் தமிழ் தெலுங்கில் வெளியாக உள்ள ஓ பேபி படத்தில் சமந்தாவுக்கு பின்னணி குரல் கொடுத்தது சின்மயி என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இதை தொடர்ந்து மீண்டும் டப்பிங் பணிகளில் சின்மயி பிசியாகலாம் என்கிறார்கள்.

1,001 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன