வெள்ளிக்கிழமை, ஜூன் 19
Shadow

காதலியா… யார்றா அந்த புஷ்பா… பதறும் யோகிபாபு..!

 

காதலியா… யார்றா அந்த புஷ்பா… பதறும் யோகிபாபு..!

தமிழ் சினிமாவில் இன்றைக்கு அசைக்க முடியாத கதாபாத்திரமாக மாறி உள்ளவர் யோகிபாபு.

சின்ன பட்ஜெட் படம் தொடங்கி சூப்பர் ஸ்டார் நடிக்கும் தர்பார் வரைக்கும் யோகிபாபு இல்லாத படமே இல்லை.

அந்தளவுக்கு பிசியாக உள்ள கன்னிப் பையன் மீது யார் கண் பட்டதோ தெரியவில்லை… சில நாட்களாக யோகிபாபுவுக்கும் அந்த நடிகைக்கும் காதல் என கிசு கிசு பரவியது.

அதிலும் வேலைன்னு வந்துட்டா வேலைக்காரன் படத்தில் புஷ்பா புருஷன் காமெடி ஹிட்.

அந்த காமெடியில் புஷபாவாக நடித்தது ரேஷ்மா. இவருக்கும் யோகிபாபுவுக்கும் காதல் என இணையத்தில் தகவல் கைகால் முளைக்க பறந்தது.

இதெல்லாம் சரிபட்டு வராது… யோகிபாபுவிடமே கேட்கலாம் என முயற்சிக்க… “என்னது நான் காதலிக்கிறேனா… யார… யாருங்க அந்த புஷ்பா… சே…சே… ரேஷ்மா… அதெல்லாம் யாருன்னே தெரியலீங்க… எனக்கு கல்யாணம் பன்ன வீட்டில் அம்மா பொண்ணு பாக்குறாங்க… இந்த கேப்புல ஏங்க இப்படி” என்று பதறுகிறார் யோகிபாபு.

435 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன