ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 20
Shadow

லைகா தயாரிப்பில் நரேன் கார்த்திக் இயக்கத்தில் “மாபியா” அருண் விஜய்..!

 

லைகா தயாரிப்பில் நரேன் கார்த்திக் இயக்கத்தில் “மாபியா” அருண் விஜய்..!

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண்விஜய் ஒரு படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த படத்திற்கு ‘மாஃபியா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த அட்டகாசமான டைட்டிலே இந்த படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது

அருண்விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக இளம் நடிகை ப்ரியா பவானிசங்கர் நடிக்கவுள்ளார்.

மேலும் இந்த படத்தின் ஒரு முக்கிய கேரக்டரில் நடிகர் பிரசன்னா நடித்து வருகிறார். ஜேக்ஸ் பிஜாய் இசையில் கோகுல் பினாய் ஒளிப்பதிவில் ஸ்ரீஜித் சரங் படத்தொகுப்பில் வளர்ந்து வரும் இந்த படம் இவ்வருட இறுதியில் வெளியாக வாய்ப்பு உள்ளது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன