வியாழக்கிழமை, மே 16
Shadow

ரஜினி மறுத்த கதையில் கலக்கப் போகும் கடைசி விவசாயி விஜய்சேதுபதி..!

 

 

ரஜினி மறுத்த கதையில் கலக்கப் போகும் கடைசி விவசாயி விஜய்சேதுபதி..!

வித்தியாசமான கெட்டப்பில் விஜயசேதுபதியின் கடைசி விவசாயி..!

நடிகர் விஜய் சேதுபதி படத்துக்கு படம் தனது கேரக்டரை வித்தியாசமாக வடிவமைத்து கொள்கிறார்.

ஹீரோயிசம் காட்டும் படங்களை விட கதையோடு செல்லும் காட்சிகளை ரொம்பவே விரும்புகிறார்.
காக்கா முட்டை மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படம் கடைசி விவசாயி. இந்த படத்தில் வித்தியாசமான கெட்டப் விஜய் சேதுபதிக்கு. இதன் பர்ஸ்ட் லுக் வெளியாகி ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் சேதுபதி நடித்திருக்கும் போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இதையடுத்து இயக்குனர் மணிகண்டன் இந்தப்படத்தின் கதாநாயகனாக முதலில் ரஜினியையைத்தான் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்றது எனவும் ஆனால் அவர் மறுத்துவிட்டுவிட்டார். என் கதையை மறுத்த ஒரு வாரத்திலேயே அவர் அரசியலில் இறங்கப்போவதாக அறிவித்தார் எனக் கூறியுள்ளார்.

இதுபோல ஏற்கனவே வெற்றிமாறன் சொன்ன அரசியல் கதையையும் ரஜினி முன்பு மறுத்ததாக அவரே சொல்லியிருக்கிறார். அரசியல் ஆசை இருக்கும் ரஜினி தொடர்ந்து அரசியல் கதைகளை மறுப்பது ஏன் என ரசிகர்கள் மனதில் கேள்வி எழுந்துள்ளது.

508 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன