வியாழக்கிழமை, ஏப்ரல் 30
Shadow

இயக்குனர்கள் அமீர், ஜனநாதன் வேட்புமனு தள்ளுபடி – சங்க தேர்தல் பரபரப்பு

 

இயக்குனர்கள் அமீர், ஜனநாதன் வேட்புமனு தள்ளுபடி – தேர்தல் பரபரப்பு

தமிழ் திரைப்பட இயக்குனர் சங்கத்தின் தலைவராக சமீபத்தில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட இயக்குனர் பாரதிராஜா திடீரென தனது பதவியை ராஜினாமா செய்து விட்ட நிலையில் புதிய தலைவரை தேர்வு செய்ய ஜூலை 21ஆம் தேதி தேர்தல் நடத்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

இதையடுத்து இயக்குனர் சங்க தேர்தலில் போட்டியிட இயக்குனர்கள் அமீர், ஜனநாதன், பி.வாசு, கே.எஸ். ரவிக்குமார் உள்பட ஒரு சில இயக்குனர்கள் விண்ணப்பம் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த நிலையில் இயக்குனர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கான இயக்குனர் அமீர், ஜனநாதன் ஆகியோரின் வேட்புமனு விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட்டது.

இவர்களின் மனு தள்ளுபடி ஆனது தெரிந்ததும் இயக்குனர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் வரும் 13ஆம் தேதி வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது

513 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன