குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களில் ஈடுபட்டால் மரண தண்டனை – மத்திய அரசு சட்ட திருத்தம்

21 Views

 

குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக்கு மரண தண்டனை – மத்திய மந்திரி சபை ஒப்புதல்

பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் மத்திய மந்திரி சபை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு சட்ட மசோதா மற்றும் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அதன் விவரம்:

பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தில் பல்வேறு திருத்தங்களை செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் போக்சோ சட்டத்தின் 4, 5 மற்றும் 6-வது பிரிவுகளில் திருத்தம் செய்ய மந்திரி சபை ஒப்புதல் அளித்தது. இதேபோல், குழந்தைகளை ஆபாச படங்களில் பயன்படுத்தினால் அபராதம் மற்றும் சிறை தண்டனை வழங்கும் வகையில் இந்த சட்டத்தின் 14 மற்றும் 15-வது பிரிவுகளில் திருத்தம் செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டது.

கடுமையான தண்டனை வழங்குவது குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களை தடுத்து நிறுத்தும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், குழந்தைகளின் கண்ணியத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்ய இதுபோன்ற கடுமையான தண்டனை அவசியமாகிறது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *