வியாழக்கிழமை, ஏப்ரல் 30
Shadow

விக்ரம் படத்தில் நடிக்க ஒரு வாய்ப்பு..!

 

விக்ரம் படத்தில் நடிக்க ஒரு வாய்ப்பு..!

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரமின் 58-வது படமாக உருவாகும் புதுப்டத்தின் ஆரம்பகட்ட பணிகள் வேகமெடுத்திருக்கும் நிலையில், இப்படத்தில் புதுமுக நடிகர்களை அறிமுகம் செய்துவைக்க இப்படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

அதற்காக படத்தை தயாரிக்கும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வயாகாம் நிறுவனமும் இணைந்து தங்களது ட்விட்டர் பக்கத்தில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது விக்ரமின் 58-வது படத்தில் நடிக்க விருப்பமுள்ள மற்றும் நடிப்பில் ஆர்வமுள்ள ஆண்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என அனைத்து வயதினர்களும் இமெயில் மூலம் புகைப்படங்களையும், நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் வீடியோக்களையும் அனுப்புமாறு பதிவிட்டுள்ளார்.

விக்ரம் நடிப்பில் கமல்ஹாசனின் தயாரிப்பில் வெளியாக உள்ள கடாரம் கொண்டான் படம் ரிலீசுக்கு ரெடியான நிலையில் தனது அடுத்த பட அறிவிப்பில் இப்படி ஒரு வாய்ப்பை கொடுத்திருக்கிறார் விக்ரம்.

693 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன