விஜய்க்கு வில்லனாகும் அர்ஜுன்..!

102 Views

விஜய்க்கு வில்லனாகும் அர்ஜுன்..!

விஜய் ஆண்டனியின் கொலைகாரனை தொடர்ந்து விஜய் நடிக்கும் படத்தில் இணைகிறார் அர்ஜுன்.

விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வரும் ‘பிகில்’ படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதிக்குள் முடிவடைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் வரும் தீபாவளி தினத்தில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது

இந்த நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை ‘மாநகரம்’ இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். அவர் தற்போது கார்த்தி நடித்து முடித்துள்ள ‘கைதி’ படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகளை கவனித்து கொண்டே விஜய் படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகளையும் கவனித்து வருகிறார்.

விஜய்-லோகேஷ் இணையும் இந்த படத்தில் ராஷிகண்ணா மற்றும் ராஷ்மிகா மந்தனா நாயகிகளாக நடிக்கவுள்ளனர். இந்த நிலையில் இந்த படத்தின் வில்லன் கேரக்டர் ஹீரோவுக்கு இணையான வலுவான கேரக்டர் என்பதால் இந்த கேரக்டரில் நடிக்க ஆக்சன் கிங் அர்ஜூனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அர்ஜூன் வில்லனாக நடித்த ‘இரும்புத்திரை’ திரைப்படம் சூப்பர்ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.
அதே போல கொலைகாரன் படத்திலும் அர்ஜுன் கதாபாத்திரம் ஹிட் அடித்தது. அர்ஜுன் ஹிட் செண்டிமெண்ட் காரணமாக விஜய் படத்தில் அர்ஜுன் இடம் பெறுவார் என்றும் அதற்காக அவருக்கு பெருந்தொகை சம்பளம் பேசப்படுகிறதாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − nine =