செவ்வாய்க்கிழமை, மே 19
Shadow

ரசிகர்களுக்கு பண்டிகை ‘டிரீட்’ கொடுக்குமா… அல்லது தயாரிப்பாளருக்கு ‘ஷாக்’ கொடுக்குமா..?!

 

ரசிகர்களுக்கு பண்டிகை ‘டிரீட்’ கொடுக்குமா… அல்லது தயாரிப்பாளருக்கு ‘ஷாக்’ கொடுக்குமா..?!

தமிழில் நெம்பர் ஒன் நடிகையிடத்தை தக்க வைத்திருக்கும் நயன்தாராவுக்கு சமீபத்திய சறுக்கல் ‘டோரா’ மிக பிரம £ண்டமாக விளம்பரப்படுத்தியும் வெளியான இடங்களில் வசூலிலும் சறுக்கல் ரசிகர்கள் மத்தியிலும் சறுக்கல் ஏற்ப டுத்திய படம். இந்த படத்தை வெளியிட்ட அதே நிறுவனம் தான் இப்போது ‘பண்டிகை’ என்ற படத்தை வெளியி டுகிறார்கள்.
சமீபத்திய தமிழ்சினிமா பரபரப்புகள், பஞ்சாயத்துக்கள், ஜிஎஸ்டி விவகாரங்கள், கேளிக்கை வரி வில்லங்கங்கள் வேலை நிறுத்தப்போராட்டங்கள் திடீர் வாபஸ் அறிவிப்புகளுக்கு பிறகு தியேட்டர் பக்கம் மக்கள் கூட்டம் வெகுவ £கவேவே குறைந்துள்ளது. இந்த நிலையில், வரும் வெள்ளியன்று ஜெமினிகணேசனும் சுருளிராஜனும், திரி, ரூபாய், பண்டிகை என பல படங்கள் ரிலீசுக்கு தயார் ஆகியிருக்கிறார்கள். ஏற்கனவே ரிலீஸ் ஆகி ஓரளவுக்கு ரசிகர்களால் வரவேற்பை பெற்ற வனமகன், இவன் தந்திரன் போன்ற படங்களும் இன்னமும் வசூல் வேட்டையில் மூச்சை பிடித்துக் கொண்டு ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் அரசிடம் பேச்சுவார்த்தை, கோரிக்கை என எதையும் வைக்காமல் திடீரென அறிவித்த ஸ்டிரைக் க £ரணமாக ஏற்பட்ட திரையுலக அசாதாரண சூழல் இப்போதுதான் மெல்ல இயல்புநிலைக்கு திரும்பி வருகிறது. அப்படியிருந்தும் தியேட்டர் கட்டணங்கள் குறையவில்லை. மத்திய அரசின் ஜிஎஸ்டி வரிகாரணமாக சாமானிய மக்கள் ஏற்கனவே பெரும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். அன்றாட வாழ்க்கை நடத்தவே பல்வேறு சங்கடங்களை சந்தித்து வருகிறார்கள். இதில் பொழுதுபோக்கு விவகாரங்களை எல்லாம் பலர் ஓரம்கட்டிவிட்டார்கள் என்றே கூறலாம்.
ஸ்டிரைக் முடிந்து திறக்கப்பட்ட தியேட்டர்களில் வசூல் குறைந்து போனதையே உதாரணமாக சொல்ல முடியும்.
இந்த சூழலில்தான் 14ம்தேதி நம்பிக்கையோடு களம் இறங்கும் படங்களில் ‘பண்டிகை’ படமும் ஒன்று. இயக்குனரின் மகள், கதாநாயகி, பாடலாசிரியர் என பல முகங்களை கொண்ட விஜயலட்சுமி தயாரிப்பாளராக மாறியிருக்கிற படம்தான் ‘பண்டிகை’. தனது காதல் கணவர் பெரோஸ்கான் இயக்கத்தில் உருவாக்கியிருக்கிற படம் இது.
சமீபத்தில் கூட ‘ஏண்டா படம் எடுத்தோம் என்று யோசித்தேன். படம் முடிந்ததும் தொடர்ந்து 4 படங்கள் பண்ணும் அளவுக்கு தைரியம் வந்து விட்டது’ என்று விஜயலட்சுமி குறிப்பிட்டது முக்கியமானது. படம் தயாரிக்கும் நேரத்தில் அடிக்கடி சண்டை போட்டோம் என்றும் உண்மையை உடைத்தார் விஜயலட்சுமி.
இப்படி பல்வேறு சிரமங்களுக்கு இடையில் உருவாகியிருக்கிற படம் ‘பண்டிகை’ இதில் கிருஷ்ணா ஆக்ஷன் ஹீரோவாகவே மாறியிருக்கிறாராம்.
இந்த படம் தயாரிக்க ஆரம்பித்து முடிப்பதற்குள் பல படங்கள் அறிவித்து வெளியாகி ரிலீஸ் ஆகி மீண்டும் திரும்பிவிட்டது. இத்தனை தாமதமாக வரப்போகும் படத்தை ‘ஆராஸ்’ சினிமாஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இவர்கள்தான் நயன்தாராவின் ‘டோரா’வை வெளியிட்டவர்கள்.
நம்பர் ஒன் நடிகையாக கோலோச்சி வரும் நயன்தாராவின் வெற்றி பயணத்தில் பெரும் வசூல் சறுக்கலை சந்தித்த படம் ‘டோரா’. அதே நிறுவனம் ‘பண்டிகை’யை வெளியிடுகிறது. தமிழ் சினிமா செண்டிமென்ட் நிறைந்தது. அதிலும் தாமதம் ஆன படங்களையும், அறிவித்த தேதியில் வராமல் மறுதேதியில் வரும் படங்களையும் ரசிகர்கள் பெரிதாக ஆர்வம் காட்டுவதில்லை.
அதிலும் குறிப்பாக ‘பண்டிகை’ படம் வியாபாரமாகாத நிலையில் ஆராஸ் நிறுவனமே வினியோக அடிப்படையில் தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள். படத்தின் நாயகன் கிருஷ்ணா பல படங்களில் நடித்திருந்தாலும் மக்களால் வசூல் ரீதியிலான நாயகனாக தன்னை நிலை நிறுத்திக் கொள்ள போராடி வருகிறார். இன்றைக்கு உள்ள பொருளாதார நெருக்கடியில் ரசிகர்களுக்கு பண்டிகை ‘டிரீட்’ கொடுக்குமா… அல்லது ரசிகர்களால் தயாரிப்பாளருக்கு பண்டிகை ‘ஷாக்’ கொடுக்குமா என்பது ரிலீஸ் ஆனதும் தெரியவரும்… அதுவரை நாமும் காத்திருப்போம்..!

கோடங்கி

1,159 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன