புதன்கிழமை, மே 15
Shadow

வெனிஸ் சுற்றுலா தளத்தில் பொது இடத்தில் காபி போட்டு குடித்த ஜெர்மன் ஜோடி அதிரடியாக வெளியேற்றம்..!

 

வெனிஸ் நகருக்கு சுற்றுலா போன இடத்தில் காபி போட்டு குடித்த ஜெர்மன் ஜோடி வெளியேற்றம்..!

இத்தாலி நாட்டின் வெனிஸ் நகரம், 117 குட்டி தீவுகளை கொண்டுள்ளது. இது சுற்றுலாப்பயணிகளின் சொர்க்கமாக திகழ்கிறது. உலகமெங்கும் இருந்து சுற்றுலா பயணிகள் குவிந்தவண்ணம் உள்ளனர்.

இந்த வகையில் ஜெர்மனியை சேர்ந்த ஜோடி ஒன்று கடந்த சில தினங்களுக்கு முன் அங்கு சுற்றுலா சென்றிருந்தது.

அந்த ஜோடி அங்குள்ள ரியால்டோ பாலத்தின் படிக்கட்டுகளில் அமர்ந்து காபி போட்டு குடித்துக்கொண்டிருந்தனர். இப்படி பொது இடத்தில் நடந்து கொள்வது அந்த நாட்டு சட்டப்படி குற்றம் ஆகும்.

இதை பார்த்த சிலர் அங்குள்ள மேயர் அலுவலகத்தில் புகார் செய்தனர்.

இதைத் தொடர்ந்து காபி குடித்த ஜோடியை பிடித்து அதிகாரிகள் 853 பவுண்ட் அபராதம் (சுமார் ரூ.75 ஆயிரம்) விதித்தனர். அத்துடன் அவர்களை உடனடியாக அந்த நகரில் இருந்தும் வெளியேற்றினர்.

காபி குடித்தது குத்தமாய்யா… ஒரு சில நாடுகளில் சுற்றுலா தளங்களில் குடி மகன்களின் அட்டகாசம் அதிகம். இன்னும் சில இடங்களில் லிப்லாக் முத்த ஜோடிகள் சர்வ சாதாரணமாக பார்க்க முடியும் அங்கெல்லாம் கூட இப்படி எந்த சட்ட திட்டமும் இல்லை.

359 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன