வியாழக்கிழமை, ஆகஸ்ட் 6
Shadow

சுந்தர். சி இயக்கத்தில் விஷால் – தமன்னா ஜோடியின் ஆக்‌ஷன்..!

 

சுந்தர். சி இயக்கத்தில் விஷால் – தமன்னா ஜோடியின் ஆக்‌ஷன்..!

இயக்குனர் சுந்தர் சி மீண்டும் நடிகர் விஷாலை வைத்து புது படமொன்றை இயக்கி வருகிறார். விஷாலுக்கு ஜோடியாக தமன்னா நடிக்கும் இப்படத்தில்  ஐஸ்வர்யா லட்சுமி , யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் படத்தின் வில்லனாக  வேதாளம், காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் நடித்த கபீர் துஹான் சிங் வில்லனாக நடிக்கிறார்.

ஹிப்ஹாப் தமிழா ஆதி தான் மீண்டும்  இசையமைக்கிறார். டிரிடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் ஆர்.ரவீந்திரன் தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்புகள் துருக்கி, அஜர்பைஜான் உள்ளிட்ட அழகான லொகேஷன்களில் படமாக்கப்பட்ள்ளது.

இந்த ஷூட்டிங்கில் நடித்த போது தான் விஷால் விபத்தில் சிக்கினார்.

அதன் பின் படத்தை பற்றி எந்த விதமான புதிய அப்டேட்டுகளும் கொடுக்காமல் இருந்து வந்த படக்குழுவினர் பட டைட்டிலுடன் கூடிய போஸ்டர் ஒன்றை இன்று வெளியிட்டுள்ளனர்.

அதன்படி படத்துக்கு ஆக்‌ஷன் என பேர் வைத்து இருக்கிறார்கள். பெயருடன் வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டர்தான் இப்போது வைரல் ஆகி வருகிறது.

647 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன