ஞாயிற்றுக்கிழமை, மே 19
Shadow

விரும்பி பாலியல் உறவு வைத்துக் கொண்டு பின்னர் பிரிந்து புகார் அளித்தால் அது பாலியல் பலாத்கார வழக்கில் சேராது – உச்சநீதிமன்றம் அதிரடி

 

 

விரும்பி பாலியல் உறவு வைத்துக் கொண்டு பின்னர் பிரிந்து புகார் அளித்தால் அது பாலியல் பலாத்கார வழக்கில் சேராது – உச்சநீதிமன்றம் அதிரடி

திருமணம் நடக்காது என்று தெரிந்தும் ஒரு பெண் தொடர்ந்து ஒருவருடன் பாலியல் உறவு வைத்திருப்பது பாலியல் பலாத்காரம் வழக்கில் சேராது என்று உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

திருமணம் செய்வதாக வாக்குறுதி தந்து தம்மை பலாத்காரம் செய்ததாக ஒரு  பெண் வழக்குத் தொடர்வது செல்லாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

துணை ராணுவ வீரர் ஒருவர் மீது தொடரப்பட்ட பாலியல் பலாத்கார வழக்கில் புகார் அளித்த பெண்ணும் அந்த வீரரும் ஆறு ஆண்டுகளாக உடல் உறவில் ஈடுபட்டதாக நிரூபிக்கப்பட்டது.
அந்த வீரர் வேறு ஒரு பெண்ணுடன் மணம் முடிக்க விரும்பிய போது அவர் மீது அந்தப் பெண் பாலியல் பலாத்கார வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கை நிராகரித்த உச்சநீதிமன்றம் திருமணம் செய்வதாக பொய்யான வாக்குறுதி அளித்த நபர் மீது உடனடியாக புகார் அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டனர்.
ஆறு ஆண்டுகளாக அவனுடன் பழகி பின்னர், வாக்குறுதியை மீறிவிட்டதாக வழக்குத் தொடர்வதை ஏற்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பொய் வாக்குறுதிக்கும் வாக்குறுதி மீறலுக்கும் வித்தியாசம் இருப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

உச்சநீதிமன்றம் அளித்த இந்த தீர்ப்பால் இனி திருமண ஆசை காட்டி பாலியல் உறவு வைத்துக் கொண்டு இப்போது ஏமாற்றுகிறார் என பெண்கள் புகார் கொடுக்க முடியாது என்று தெரிகிறது. அதோடு திருமண வாழ்க்கை அமைவதற்கு முன் உடல் ரீதியான உறவை பெண் தவிர்க்க வேண்டிய கட்டாயத்தையும் இந்த தீர்ப்பு சுட்டிக் காட்டுகிறது.

412 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன