ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 7
Shadow

விஜய்க்கு வில்லன் ஆக நடிக்க 10 கோடி சம்பளமாம் மக்கள் செல்வனுக்கு…!

விஜய்க்கு வில்லன் ஆகிறார் விஜய்சேதுபதி!

அட்லியுடன் பிகில் படத்தை முடித்த விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை விஜய்யின் மாமா ஜான்பிரிட்டோ தயாரிக்கிறார்.

இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக பிரபல நடிகரை பேசி வருகிறார்கள் என செய்திகள் வந்தது.

அந்த பிரபல நடிகர் வேறு யாருமல்ல மக்கள் செல்வன் விஜய்சேதுபதி தான். ஏற்கனவே ரஜினியின் பேட்ட படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருந்தார்.

இப்போது மீண்டும் ஒரு நெகடிவ் ரோலில் நடிக்க இருக்கிறார்.

இதற்காக இவருக்கு சுமார் 10 கோடிவரை சம்பளம் பேசி அதில் 3 கோடி ரூபாய் வரை அட்வான்ஸ் தொகை கொடுக்கப்பட்டு கதாபாத்திர விவரங்களும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விவரித்து விட்டதாக கூறப்படுகிறது.

இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பட நிறுவனம் விரைவில் வெளியிடலாம்.

 

 

 

376 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன