சீன அதிபர் – பிரதமர் மோடி இவர்களுக்கிடையே யார் இந்த 3-வது நபர்? – புதுத்தகவல்…!*

123 Views

 

*சீன அதிபர் – மோடி இவர்களுக்கிடையே யார் இந்த 3-வது நபர்? – வியக்க வைக்கும் தகவல்…!*

சீன அதிபர் ஜின்பிங் மற்றும் பிரதமர் மோடி சந்திப்பு மகாபலிபுரத்தில் நடைபெற்று வருகிறது. மகாபலிபுரத்தில் அமைந்திருக்கும் சிற்பம் சுற்றுலா மையங்களைப் பார்வையிட்டபடி இருவரும் பேசி வருகின்றனர்.

மோடி – ஜின்பிங் சந்திப்பு முறைசாரா சந்திப்பாக அமைந்துள்ளதால் இருநாட்டுத் தலைவர்களும் எந்தக் குறிப்புகளும் வைத்துக்கொள்ளாமலேயே உரையாடுவார்கள்.

இந்தச் சந்திப்பின்போது மோடி மற்றும் சீன அதிபருடன் மேலும் இரண்டு பேர் உடனிருக்கின்றனர்.

அதில் ஒருவர் சீனர். இன்னொருவர் இந்தியர்.மது சுதன் ரவீந்திரன் எனும் இந்திய அதிகாரி இரு தலைவர்களுக்குமான மொழிபெயர்ப்பாளராகச் செயல்பட்டு வருகிறார்.

மது சுதன் சீன தலைநகர் பெய்ஜிங்கில் இருக்கும் இந்திய தூதரகத்தின் முதன்மை செயலர் (அரசியல்) ஆவார்.

கடந்த ஆண்டு சீனாவில் நடைபெற்ற மோடி – ஜின்பிங் சந்திப்பில் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றுமாறு கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் அங்கும் உடனிருந்தார் மது சுதன்.

தற்போதும் அவரே மோடி – ஜின்பிங் சந்திப்பின்போது மொழிபெயர்ப்பாளராகப் பணியமர்த்தப்பட்டுள்ளார்.

பின்னர் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் 2 ஆண்டுகள் பணியாற்றினார்.

பிறகு மீண்டும் பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகத்தின் இரண்டாவது செயலாளராக நியமிக்கப்பட்டு 2013ல் சீனாவுக்கு அனுப்பப்பட்டார்.

தற்போது, சீனாவுக்கான இந்திய தூதரகத்தின் முதன்மை செயலராக இருக்கும் மது சுதனுக்கு, சீனாவின் அதிகாரப்பூர்வ மொழியான மாண்டரின் உள்பட பல மொழிகள் நன்கு தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்த மது சுதன் இந்திய வெளியுறவுப் பணியில் (IFS) 2007ம் ஆண்டு பேட்ச் அதிகாரி ஆவார்.

பணியில் பெரும்பாலான நாட்களை சீனாவில் கழித்த மது சுதனுக்கு, முதல் பணியே சீனாவில் உள்ள இந்திய தூதரகத்தின் மூன்றாம் நிலை செயலராகத்தான் வழங்கப்பட்டது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 4 =