சனிக்கிழமை, ஏப்ரல் 27
Shadow

திருவண்ணாமலையில் சர்வதேச திரைப்பட விழா இன்று தொடங்கி, 5 நாட்கள் நடக்க உள்ளது!

 

திருவண்ணாமலையில் சர்வதேச திரைப்பட விழா இன்று தொடங்கி, 5 நாட்கள் நடக்க உள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணை பொதுச் செயலாளர் எஸ்.கருணா கூறியதாவது:

கடந்த 5 ஆண்டுகளாக கம் பம், பட்டுக்கோட்டை, திருப்பூர் உள்ளிட்ட சிறு நகரங்களில் சர்வதேச திரைப்பட விழாக்களை நடத்தியுள்ளோம். 6-வது ஆண்டு திரைப்பட விழா திருவண்ணா மலையில் 16-ம் தேதி (இன்று) தொடங்கி 20-ம் தேதி வரை நடக்கிறது.

திரைப்பட விழாவை 16-ம் தேதி காலை 10 மணிக்கு தி.மலை ஆட்சியர் க.சு.கந்தசாமி தொடங்கி வைக்கிறார். எழுத்தாளர் தமிழ்ச் செல்வன் தலைமையில் நடக்கும் இந்த விழாவில் எழுத்தாளர் சு.வெங்கடேசன் எம்.பி., இயக்கு நர் கோபி நயினார், திரைத்துறை பேராசிரியர் எம்.சிவக்குமார், நடிகை ஷீலா உள்ளிட்டோர் பங் கேற்கின்றனர். சமீபத்தில் மறைந்த திரை ஆளுமைகளான மகேந் திரன், கிரிஷ் கர்னாட், மிருணாள் சென் ஆகியோருக்கு நிகழ்ச்சியில் அஞ்சலி செலுத்தப்படுகிறது.

22 படங்கள் திரையிடப்படும்

தி.மலையில் உள்ள அருணா சலம் திரையரங்கில் 5 நாட்களும் மெக்சிகோ, அமெரிக்கா, தென் கொரியா, ஸ்பெயின், லெப னான், ஹங்கேரி உட்பட 12 நாடுகளை சேர்ந்த 22 படங்கள் திரையிடப்படுகின்றன. பல்வேறு விருதுகள் பெற்ற ‘டூ லெட்’ (தமிழ்), ‘மாண்டோ’, ‘நியூட்டன்’ (இந்தி) ‘கும்பலங்கி நைட்ஸ்’ (மலையாளம்), ‘கோல்டு வார்’ (ஹங்கேரி), ‘சம்மர் வித் மோனிகா’ (ஸ்வீடன்) ஆகிய படங்களும் திரையிடப்படுகின்றன.

இதுதவிர, தினமும் நடக்கும் கலந்துரையாடலில் இயக்குந‌ர்கள் செழியன், பிரம்மா, லெனின் பாரதி, எடிட்டர் லெனின், பாட லாசிரியர் உமாதேவி உள்ளிட் டோர் பங்கேற்கின்றனர்.

20-ம் தேதி நடக்கும் நிறைவு விழாவில் முற்போக்கு எழுத்தாளர் சங்க பொதுச் செயலாளர் ஆத வன் தீட்சண்யா, இயக்குநர் ராஜு முருகன், நடிகை ரோகிணி பங்கேற்கின்றனர்.

309 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன