
விஜய் நடித்த பிகில் பட கதை சிக்கல்… அட்லிக்கு கெடு விதித்த கோர்ட்..
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் படத்தை ஏ.ஜி.எஸ் தயாரிக்கிறது. இந்த படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் இந்த கதை தன்னுடையது என உதவி இயக்குனர் செல்வா என்பவர் சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். பின்னர் அந்த வழக்கை அவரே வாபஸ் பெற்றார்.
இந்த நிலையில் மீண்டும் செல்வா கதை திருட்டு விவகாரத்தை கையில் எடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
பிகில் படத்தை தடை விதிக்க கோரிய வழக்கில், படதயாரிப்பு மற்றும் அட்லீ தரப்பில் வழக்கு தொடர்பான ஆவணங்களை நாளை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘பிகில்’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் கதை தன்னுடையது என்றும் கால் பந்தாண்டத்தை மையமாக
256 பக்கங்கள் கொண்ட கதையை தான் தயார் செய்து தென்னிந்திய எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்து, சில படத்தயாரிப்பு நிறுவனங்களிடம் கதை சொல்லி இருந்தாகவும், இயக்குனர் செல்வா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.அதில் பிகில் படத்திற்கு தடை விதிக்க கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய படத்தயாரிப்பு நிறுவனம் மற்றும் அட்லீ க்கு உத்தரவிட்டு விசாரணையை நாளை தள்ளி வைத்தார்
