சனிக்கிழமை, ஜூன் 6
Shadow

பரிமளா & கோ விமர்சனம் 2.5/5

 

 

பரிமளா & கோ விமர்சனம் 2.5/5

 

ஒரு ரவுடி கொலையால், அமைதியாக சிக்கனமாக வாழ்ந்து வருகிற குடும்பம் ஒன்று சந்திக்கும் சிக்கல்களே கதை!

பரிமளா (ஜெயராம்), சுதந்திரம் (ஊர்வசி) தம்பதி தங்களின் மகள்கள் பராசக்தி (சஞ்சனா) மதுமிதா (அனந்திதா) உடன் அமைதியாக சிக்கனமாக வாழ்ந்து வருகிறார்கள். அதே ஏரியாவைச் சேர்ந்த ரவுடி மற்றும் போதைப்பொருள் விற்கும் வர்கீஸ் (சாண்டி) மதுமிதாவைக் காதலிப்பதாகச் சொல்லி தொல்லை செய்கிறார். பரிமளா குடும்பத்து நபர்களையும் சீண்டுகிறார்.

ஆனால் மூத்த மகளுக்கு ரவுடி சாண்டி தொடர்ந்து காதல் தொல்லை கொடுக்க ஆரம்பிக்கிறார். நாளுக்கு நாள் அந்த தொல்லை அதிகரிக்க, அவரது குடும்பத்தினரும் மறைமுகமாக அழுத்தம் கொடுக்கிறார்கள்.

இந்த பிரச்சனையில் இருந்து எப்படி வெளியே வருவது என்று குடும்பமே குழப்பத்தில் இருக்கும் நேரத்தில், சாண்டி திடீரென கொலை செய்யப்படுகிறார்.

இந்த கொலை வழக்கை விசாரிக்க வரும் காவல்துறை அதிகாரி மிஷ்கின், முதல் சந்தேகத்தை ஜெயராம் குடும்பத்தின் மீது திருப்புகிறார். விசாரணை தீவிரமாவதோடு, குடும்பத்தினரே ஒருவரை ஒருவர் சந்தேகப்பட ஆரம்பிக்கிறார்கள்.

பின்னர் உறவினர்கள், நண்பர்கள் என ஒவ்வொருவரின் மீதும் சந்தேகம் திரும்புகிறது.

இறுதியில் சாண்டியை கொலை செய்தது யார்? கொலையாளியை காவல்துறை அதிகாரி மிஷ்கின் கண்டுபிடித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை….

தன்னுடைய வழக்கமான காமெடி பாணியில், ஒரு த்ரில்லர் சேர்த்து கொடுக்க முயன்றிருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ்.

பரிமளா ரோலில் அட்டகாசமாகப் பொருந்துகிறார் ஜெயராம். கஞ்சத்தனமாக குடும்பம் நடத்துவது, கொலையை யார் செய்திருப்பார் என சந்தேகிப்பது, மனைவி கொடுக்கும் குடைச்சல்களுக்கு எரிச்சல் ஆவது எனப் பல காட்சிகளில் சிரிக்க வைக்கிறார். ஊர்வசி வழக்கம்போல தன் காமெடி மாடுலேஷன்கள் மூலம் காமடிக்கு வலு சேர்க்கிறார். சில இடங்களில் அதுவே கொஞ்சம் ஓவர் டோஸும் ஆகிறது. மூத்த மகள் பராசக்தியாக வரும் சஞ்சனாவுக்குக் கிட்டத்தட்ட `லப்பர் பந்து’ படத்தின் அதே ரோல்தான்.

வீட்டு ஓனராக வரும் யோகிபாபுவின் ஒன்லைனர்கள் சில சிரிக்க வைக்கிறது, பல சோதிக்கிறது. காவலராக வரும் மிஷ்கின் காட்சிகள் சுவாரசியம் சேர்கின்றன. மிக அசட்டையாக இந்த வழக்கை விசாரிப்பதும், சாப்பிட்டுக் கொண்டே இருக்கும் மேனரிஸமும் சிறப்பு. வில்லன் வேடத்தில் வரும் சாண்டி காமெடி கலந்து வில்லத்தனம் காட்ட முயல்கிறார்.

கொலை, போதை, பெண் மீதான தாக்குதல் என சீரியஸ் விஷயங்களை எடுத்துக்கொண்டு, அதை காமெடியாக கொடுக்க முயன்றது ஓகே. ஆனால், அதில் காமெடி மிகக்குறைவான இடங்களிலேயே ஒர்க் ஆகிறது. சீரியஸான விஷயங்களையும் காமெடி செய்வதால் அதை நம்மால் எப்படி எடுத்துக் கொள்வது என குழப்பம் வருகிறது. த்ரில்லர் படம் என்பதால், பல பாத்திரங்களுக்குக் கொலைக்கான நோக்கங்கள் காட்டப்படுகிறது. ஆனால், அது எதுவுமே கதையை நகர்த்முயற்சிக்கவில்லை. படம் முடிந்த பின் பார்வையாளர்களுக்கு விடை இல்லா பல கேள்விகள் எழும்பும்.

மொத்தத்தில் பரிமளா & கோ டார்க் ஹூமர் மிஷன் முழுமையடையவில்லை!

 

 

9 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன