செவ்வாய்க்கிழமை, மே 19
Shadow

கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதால் பிரதமருக்கு சத்யராஜ் மகள் கடிதம்..!

தமிழின் முக்கிய நடிகர்களுள் ஒருவர் சத்யராஜ். அவரது மகள் திவ்யா சத்யராஜ். ஊட்டச்சத்து மருத்துவரான இவர் சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். தந்தையை போலவே, தமிழ் மீது அதீத ஈடுபாடு உடைய திவ்யா, சமீபத்தில் தமிழ் அகதிகளுக்காக இலவச சிறப்பு மருத்துவ நேர்க்காணல் ஒன்றை நடத்தியிருந்தார்.

கடந்த வாரம் சில வெளிநாட்டு மருத்துவ நிறுவனங்கள் திவ்யா சத்யராஜ் தவறான மருந்தை பிரயோகிக்க மறுத்ததை தொடர்ந்து அவருக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதும், அதை தொடர்ந்து அவருக்கு கொலை மிரட்டல் செய்ததும் அறிந்ததே.
இதை தொடர்ந்து திவ்யா சத்யராஜ், பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது,

“அங்கீகரிக்கப்படாத, அபாயகரமான மருந்துகளை தடை செய்யுமாறு பிரதமர் மோடியிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார். மேலும் நீட் நுழைவு தேர்வினால் வரும் விளைவை பற்றியும், மருத்துவ உலகில் பெருகி வரும் அசிரத்தை பற்றியும், நுழைவு தேர்வில் நடக்கும் அநியாயங்கள் பற்றியும் திவ்யா எழுதியிருக்கிறார்”.

460 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன