புதன்கிழமை, ஜூன் 10
Shadow

வெற்றி களைக்கட்டும் புதிய கூட்டணி. “வானம் கொட்டட்டும்” முதல் பாடல் வெளியீடு!

 

வெற்றி களைக்கட்டும் புதிய கூட்டணி. “வானம் கொட்டட்டும்” முதல் பாடல் வெளியீடு.

மணிரத்னம் வழங்கும் மெட்ராஸ் டாக்கீஸ் ‘வானம் கொட்டட்டும்’ படத்தின் படப்பிடிப்பு சென்னை, திருநெல்வேலி பகுதிகளில் நடைபெற்று முடிவடைந்தது.

பாடகர் சித்ஸ்ரீராம் இசை அமைப்பாளராக அறிமுகமாகும் இப்படத்தின் முதல் பாடல் வெளியானது. முதல் பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் அறிமுகம் செய்தார். புது கவிஞர் சிவா அனந்த் எழுதிய வரிகள் அனைத்தும் மக்களிடையே வெகுவாக கவர்ந்துள்ளது. மெலோடி பாடலான

‘கண்ணு தங்கம் ராசாத்தி..
உன்ன கண்டாலே
நெஞ்சு மூச்சூடும் தீவாளி..
சொன்னா வம்பு மகராசி
ஒம் பேரு சொல்லாட்டி..
மழை ஊருக்கு பெய்யாது டீ..
தனியில நடக்கையில்..
எனக்கு நீ துணையிரு..
மடியில… மனசுல…
உறங்கிட… யெடங்கொடு…’

இந்த பாடல் வரிகள் ஹிட்டாகி உள்ளது. இந்த புது காம்பினேஷனான சித்ஸ்ரீராம் – சிவா அனந்த் கூட்டணியின் மற்ற பாடல்களும் விரைவில் வெளியிடுகிறார்கள் சோனி மியூசிக்.

டிசம்பர் முதல் வாரத்தில் இதன் பாடல் வெளியீட்டு விழா நடைபெறுகிறது.

ஒவ்வொரு உடஞ்ச கண்ணாடியிலும்
உன் உருவம் தெரியுது..
ஒவ்வொரு மழை துளியிலும் உன் உருவம்…
எப்பவும் நான் பார்த்துக் கொண்டேயிருக்கேன்..

இப்படி கவிதையாய்..  படமும் முற்றிலும் மாறுபட்ட குடும்பம் – காதல் கதை அமைப்புடன் உருவாகி வருகிறது. 2020 ஜனவரி வெளியீட்டுக்கான வேலைகள் நடைபெற்று வருகிறது.

1,080 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன