
தர்பார் ஆடியோ விழாவில் பேசும்போது “திருநங்கை வேடத்தில் நடிக்க ஆசை” என ரஜினிகாந்த் கூறியிருந்தார்.
இந்த நிலையில் கதாநாயகியை திருநங்கை ஆக சித்தரித்து தாதா87 என்ற பெயரில் படமெடுத்து பரபரப்பாக பேசப்பட்ட இயக்குநர் விஜய்ஸ்ரீஜி தனது டிவிட்டர் பக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கவனத்திற்கு என ஒரு தகவலை பதிவு செய்துள்ளார்.
அதில் தர்பார் ரிலீசுக்கு முன் நேரம் இருந்தால் தனது இயக்கத்தில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்ட தாதா87 படத்தை ரஜினிகாந்துக்கு திரையிட்டு காட்ட விரும்புவதாகவும், அவர் ஆசைப்படியே அழகான திருநங்கை கதை ஒன்று இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
ரஜினிகாந்த் நடிப்பில் படம் இயக்க வேண்டும் என பல இயக்குனர்கள் காத்திருக்கும் போது ரஜினி ஆசையை நிறைவேற்ற தன்னிடம் நல்ல கதை இருக்கிறது அதை நிரூபிக்க ஏற்கனவே ஒரு அழகான படத்தையும் இயக்கி ரிலீஸ் செய்திருக்கிறேன் என இயக்குனர் விஜய்ஸ்ரீஜி கூறியிருப்பது தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய்ஸ்ரீஜி இப்போது பொல்லாத உலகில் பயங்கர கேம் எனற பெயரில் பப்ஜி படமெடுத்து வருகிறார்.
ஏற்கனவே இவர் இயக்கிய தாதா87 படத்தின் மூலம் தான் நடிகர் சாருஹாசனுக்கு வாழ் நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Intha முயற்சி ku வெற்றி பெற வாழ்த்துக்கள் @dhadha87 Team????????????????????????
— Arvind_sam (@Arvindsam8) December 17, 2019
