வெள்ளிக்கிழமை, ஜூலை 3
Shadow

சென்னையில் இஸ்ரேல் பட விழா..!

 

 

இந்திய இஸ்ரேல் உறவுகள் பலப்படும் விதமாக இந்திய பிரதமர் மோடி சமீபத்தில் இஸ்ரேல் சுற்றுப்பயணம் செய்தார். இதன் விளைவாக பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
பொழுதுபோக்கு, கலாச்சாரம், தொழில், வர்த்தம் என பல பிரிவுகளில் இஸ்ரேல் நாட்டுடன் இந்தியா புதுப்புது ஒப்பந்தங்களில் செயல்படப்போகிறது.
அதன் ஒருபகுதியாக இஸ்ரேல் திரைப்படத்துறையில் சிறந்த பரிசு பெற்ற திரைப்படங்களை இந்தியாவில் திரையிட முடிவு செய்யப்பட்டது.


இதன்காரணமாக சென்னையில் இஸ்ரேல் திரைப்பட விழா நடைபெற உள்ளது.
இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்புடன் இணைந்து இஸ்ரேல் தூதரகம் இதற்கான ஏற்பாடுகளை செய்து உள்ளது.


பல விருதுகளை பெற்ற அபுலா எக்ஸ்பிரஸ். ஹில் ஸ்டார்ட், மெல்டிங் அவே, ஒயிட்பேந்தர் உட்பட பல படங்கள் திரையிடப்பட உள்ளது.
24ம் தேதி மேக்ஸ் முல்லர் பவனில் இதன் தொடக்க விழா நடைபெறுகிறது. இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் யேல் அஸ்வித் திரைப்பட விழாவை தொடங்கி வைக்கிறார். 24ம் தேதி தொடங்கி 3 நாட்கள் இந்த விழா நடைபெறுகிறது.

 

 

377 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன