சனிக்கிழமை, மே 2
Shadow

உண்மை சம்பவத்தை சினிமாவாக்கிய தொட்டுவிடு தூரம்..!

 

 

தொட்டு விடும் தூரம்’ என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது. இதில் விவேக்ராஜ் கதாநாயகனாகவும், மோனிகா சின்னகோட்லா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். லிவிங்ஸ்டன், சீதா, சிங்கம்புலி, பாலசரவணன், ஜீவாரவி, ராஜசிம்மன், கிரேன் மனோகர் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள்.

இந்த படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி வி.பி.நாகேஸ்வரன் டைரக்டு செய்துள்ளார். பி.ராமநாதன், ஆர்.சுரேஷ் ஆகியோர் தயாரித்துள்ளனர்.


படத்தை பற்றி இயக்குனர் வி.பி.நாகேஸ்வரன் கூறியதாவது:- “எனது நண்பன் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து, ‘தொட்டு விடும் தூரம்’ படம் தயாராகி உள்ளது. சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் இருந்து மாணவர்கள் என்.எஸ்.எஸ். முகாமுக்காக ஒரு கிராமத்துக்கு செல்கிறார்கள்.

அங்கு சமூக சேவை செய்யும் அழகு சுரேஷ் என்ற இளைஞனை, பிரியா என்ற மாணவி சந்திக்கிறாள். இருவருக்கும் காதல் மலர்கிறது.
கடைசியில் இந்த காதல் என்ன ஆனது என்பதுதான் படம். படக்குழுவை இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் பாராட்டினார்.

520 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன