
சென்னை to ஐதராபாத் விமானத்தில் தர்பார் விளம்பங்கள்… பட்டையை கிளப்பும் லைகா..!
ரஜினிகாந்த் நடிப்பில் முருகதாஸ் இயக்கியுள்ள படம் தர்பார்.
இந்த படம் பொங்கல் கொண்டாட்டமாக வரும் 9ம் தேதி உலகம் முழுதும் ரிலீஸ் ஆகிறது.

பட ரிலீசுக்கு லைகா நிறுவனம் பல கோடிகள் செலவழித்து பிரமாண்ட விளம்பரங்களை செய்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக சென்னை டூ ஐதராபாத் செல்லும் தனியார் விமானங்களில் தர்பார் பட விளம்பரங்கள் பெரிய அளவில் செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே கலைப்புலி தாணு தயாரித்த கபாலி பட விளம்பரங்கள் மலேசிய விமானங்களில் செய்யப்பட்டிருந்தது. அந்த பாணியை தர்பார் தயாரிப்பான லைகா கையில் எடுத்துள்ளது.

