வெள்ளிக்கிழமை, மார்ச் 29
Shadow

பெற்றோர் குழந்தைகளுடன் பார்க்கவேண்டிய பிழை – கோடங்கி விமர்சனம்

 

 

படிக்காமல் கல் உடைக்கும் தொழிலுக்கு வந்து விட்ட பெற்றோர் தங்களின் பிள்ளைகளாவது நன்றாக படித்து பெரியாளாக வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதனால் பிள்ளைகளிடத்தில் கண்டிப்போடு நடக்கிறார்கள். ஆனால் பெற்றோரின் கண்டிப்பை விரும்பாத 3 சிறுவர்கள் வீட்டை விட்டு ஓடுகிறார்கள்.
கடைசியில் அவர்கள் என்ன ஆகிறார்கள் என்பதை மிக யதார்த்தமாக சொல்லி இருக்கும் படம் தான் பிழை.

டர்னிங் பாயிண்ட் தாமோதரன் தயாரித்து நடித்திருக்கிற படம். ராஜவேல் கிருஷ்ணா என்ற இயக்குனர் அறிமுக படமாக பிழை வந்திருக்கிறது.

மைம் கோபி, சார்லி, ஜார்ஜ் இவர்களின் யதார்த்தமான நடிப்பு படத்துக்கு பலம் சேர்ப்பதோடு பல இடங்களில் கண்ணீர் வரவழைக்கிறது.

காக்கா முட்டை ரமேஷ், நஷித் கோபால், நாகவேந்திரா சிரஞ்சீவி, தர்ஷினி குழந்தை நட்சத்திரங்களின் பங்கு பலம் பெறுகிறது.

பெற்றோர் சொல்லை மீறி போனால் என்ன விளைவுகள் எல்லாம் வரும் என்பதை மிக அழுத்தமாக வலியோடு சொல்லி கிளைமாக்ஸ் காட்சியில் அனைவரையும் மனம் கனக்க வைத்து இயக்குனர் ராஜவேல் கிருஷ்ணா தனி கவனம் பெறுகிறார.

இளையா ஹீரோவாக அறிமுகம் ஆனாலும் ஏற்கனவே பல படங்களில் நடித்த அனுபவ நடிகர் போல சில இடங்களில் ரசிக்க வைக்கிறார். மாரி வினோத் கதாபாத்திரமும் ஆதீக்க சாதிக்கு எதிராக கம்பு சுற்றுகிறது.

மொத்தத்தில் இந்த நாக ரீக மோகத்தில் பிழை போன்ற படங்கள் வரவேற்புக்கு உரியது.

– கோடங்கி

353 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன