சனிக்கிழமை, மே 2
Shadow

போண்டா சாப்பிட்டதில் உருளைகிழங்கு தொண்டையில் சிக்கி பெண் பலி..!

 

 

சென்னை சூளைமேடு காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்த கங்காதரன் என்பவரின் மனைவி பத்மாவதி என்பவர் தனது கணவருடன் தாய் வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது அவரது தாயார் போண்டா வாங்கி மகளுக்கு ஆசையாக கொடுத்துள்ளார். அந்த போண்டாவை பத்மாவதி சாப்பிட்டபோது திடீரென போண்டா அவரது தொண்டையில் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டது

இதனையடுத்து உடனடியாக ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பத்மாவதியை அவரது தாயார் மற்றும் கணவர் கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே பத்மாவதி இறந்துவிட்டதாக தெரிவித்ததால் இருவரும் அதிர்ச்சியடைந்தனர்.

தற்போது பத்மாவதியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது

விசாரணையில் உருளைக்கிழங்கு போண்டாவை பத்மாவதி, பேசிக் கொண்டே சாப்பிட்டுள்ளார். அதனால்தான் மூச்சுகுழாய்க்குள் உருளைக்கிழங்கு சிக்கி மரணத்தை ஏற்படுத்தியது தெரிய வந்துள்ளது.

574 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன