சனிக்கிழமை, மே 2
Shadow

பால்தாக்ரே வாழ்க்கை வரலாற்று படத்தில் சாருஹாசன்… மீண்டும் சர்ச்சையில் சிக்கும் தாதா87 இயக்குனர்..!

 

 

பால்தாக்ரே வாழ்க்கை வரலாற்று படத்தில் சாருஹாசன்… மீண்டும் சர்ச்சையில் சிக்கும் தாதா87 இயக்குனர்..!

உலக நாயகன் கமல்ஹாசன் அண்ணன் சாருஹாசன் கடந்த ஆண்டு தாதா87 படத்தில் தாதா கெட்டப்பில் நடித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். அதோடு உலக அளவில் அதிக வயதான நடிகர் என்ற பெறுமையையும் சமீபத்தில் வாழ் நாள் சாதனையாளர் விருதையும் சாருஹாசன் பெற்றார்.

இந்த நிலையில் நடிகர் சாருஹாசனுக்கு இன்றுடன் 90 வயது முடிந்து 91 வயது தொடங்குகிறது. 91 வயதிலும் பல படங்களில் சாருஹாசன் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தாதா87 இயக்குனர் விஜய்ஸ்ரீஜி தனது டிவிட்டர் பக்கத்தில் சாருஹாசனை வாழ்த்தி ஒரு பதிவு போட்டுள்ளார்.

அந்த பதிவில் சாருஹாசன் அச்சு அசலாக மராட்டிய பிரபல அரசியல் தலைவர் பால்தாக்ரே போன்ற தோற்றத்தில் சாருஹாசன் மிரட்டலாக அமர்ந்திருக்கிறார்.

அதோடு நெற்றியில் நீள வகிடு குங்குமமும், ஆரஞ்சு கலர் சால்வையும் பார்க்கும் போது பால்தாக்ரே வாழ்க்கை வரலாறு படத்தை விஜய்ஸ்ரீஜி இயக்க திட்டமிட்டிருக்கிறார் என்பதும், பால்தாக்ரே வேஷத்தில் சாருஹாசன் நடிப்பதும் உறுதியாகிறது.

அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வராவிட்டாலும் சாருஹாசன் பிறந்த நாளான இன்று வெளியாகி உள்ள இந்த படமும், பதிவும் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் இந்தி சினிமா உலகிலும் பெரும பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதோடு தாதா87 படத்தில் அழகான ஹீரோயினை திருநங்கை ஆக மாற்றி சர்ச்சையில் சிக்கினார். இப்போது மீண்டும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தும் பால்தாக்ரே வாழ்க்கை வரலாறு கதை கையில் எடுத்து மீண்டும் சர்ச்சை வளையத்தில் வந்திருக்கிறார் இயக்குனர் விஜய்ஸ்ரீஜி.

இப்போது பொல்லாத உலகில் பயங்கர கேம் என்ற பப்ஜி படத்தை இயக்கி வருகிறார் விஜய்ஸ்ரீஜி. இது முடிந்ததும் சாருஹாசன் தாதா2020 தொடஙக திட்டம்.

இந்த பதிவின் மூலம் மத்திய அரசின் பார்வையும் இயக்குனர் விஜய்ஸ்ரீஜி மீது விழுந்துள்ளது. காரணம் விஜய்ஸ்ரீஜி இயக்குநர் ஆக இருந்தாலும் வழக்கறிஞர் ஆக பணியாற்றி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த முறை தாதா87 படத்தின் மூலம் தென்னிந்திய அளவில் கவனம் பெற்ற இயக்குனர் விஜய்ஸ்ரீஜி-சாருஹாசன் கூட்டணி இந்த முறை இந்திய அளவில் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பால்தாக்ரே வாழ்க்கை வரலாறு கதையா எனபதை இயக்குனர் விஜய்ஸ்ரீஜி தான் தெளிவுபடுத்த வேண்டும்.

– கோடங்கி

703 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன