
கலைப்புலி தாணு பிரமாண்ட தயாரிப்பாக தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கும் கர்ணன் தொடங்கியது..!
பரியேறும் பெருமாள் படத்தின் மெகா ஹிட் மூலம் தமிழ் சினிமாவில் திடீர் கவனம் பெற்றவர் இயக்குனர் மாரி செல்வராஜ்.
தமிழ் சினிமாவில் பிரமாண்டமான படைப்புகளை தயாரிக்கும் பிரபல தயாரிப்பாளர் தாணுவின் அடுத்த தயாரிப்பில் நடிகர் தனுஷ் நடிக்கிறார்.
ஏற்கனவே கடந்த ஆண்டின் கடைசியில் ரிலீஸ் ஆகி ஹிட் அடித்த தனுஷின் அசுரன் படத்தையும் தாணுதான் தயாரித்திருந்தார்.
#கர்ணன் #Karnan –
அன்பு, இரக்கம், கருணை உள்ளவர் மட்டுமல்ல, வெற்றியையும் தருபவர்!
தொடர் படப்பிடிப்பில்..@dhanushkraja @mari_selvaraj @thevcreations #D41 pic.twitter.com/sTlhUTtMif— Kalaippuli S Thanu (@theVcreations) January 5, 2020
இப்போது இயக்குனர் மாரி செல்வராஜ், தனுஷ், தயாரிப்பாளர் தாணு மூவரும் இணைந்து கர்ணன் படம் உருவாகும் என அறிவித்திருந்தார்கள்.
இந்த படத்தின் படப்பிடிப்பு இப்போது தொடங்கி இருக்கிறது.
இது குறித்து தயாரிப்பாளர் தாணு தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே ஹிட் அடித்த கூட்டணி இணைந்திருப்பதால் கர்ணன் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
